அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
வினை தீர்க்க வாரயோ விக்னேஸ்வரா...
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்து இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே - விநாயகர் ஸ்லோகம்

எந்த காரியமானாலும் விநாயகரைத் துதித்து துவக்கினால்  தொட்டது துலங்கும் என்பது ஐதீகம். பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு! என்ற பாடல் வரி இந்த கூற்றை மெய்ப்பிக்கும்.

தந்தையாகிய சிவபெருமானே கூட விநாயகருக்கே முதலிடம் தருகிறார். முருகப்பெருமானும் வள்ளியை மணம் முடிக்க தனது அண்ணன் விநாயகனை வேண்டிக் கேட்டுக் கொண்ட பின்னரே அவருக்கு உதவி புரிந்து அருளினார் என்று ஆன்மிகக் கதைகளில் கூறுவது உண்டு.

இதனால்தான்  கணபதியை  முழு முதல் கடவுள் என்று அழைக்கிறோம். காக்கும் கடவுளாம் கணேசனின் சன்னதி(சந் நிதி)இல்லாத கோவிலை இங்கு காண முடியாது.

பிள்ளையார் பட்டி  ஈச்சனாரி விநாயகர் கோவில்  மணக்குள விநாயகர்  திருச்சி உச்சிப்புளி விநாயகர் போன்ற ஆலயங்களில் விநாயகர் மூலவராகவே காட்சியளிக்கிறார்.

இத்தனை பெருமை வாய்ந்த ஐந்து கரத்தோனை  ஆனை முகத்தோனை போற்றி புகழும் நாள்தான் விநாயகர் சதுர்த்தி.
இந்த விநாயக சதுர்த்தி ஒவ்வொரு ஆவணி மாதம் சுக்லபட்சத்தில் (வளர்பிறையில்) வரும் சதுர்த்தி தினத்தில் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வரும் சனிக்கிழமை(15-09-2007)  கொண்டாடப்படுகிறது

விநாயகப் பெருமானுக்கு கஜானன கணபதி  தூமகேது  வல்லப கணபதி யானை முகத்தோன் என்ற பெயர்களும் உண்டு.

விநாயகர் தனது ஐந்து கரங்களில் பாசம்  அங்குசம்  ருத்திராட்ச மாலை  தந்தம்  மோதகம் ஆகியவை திகழ்கின்றன. எனவேதான் இவர் ஐங்கரன் என்ற பெயராலும்  அழைக்கப்படுகிறார்.

வேண்டியது தரும் வேழமுகனை எப்படி வழிபடலாம்

காக்கும் கடவுளாம் கணநாதனை சதுர்த்தியன்று வீட்டில் வழிபட சில நெறிமுறைகளை முன்னோர் வகுத்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியன்று வீட்டை சுத்தம் செய்து  கோலம் போட்டு  வாழை மரம்  மாவிலைத் தோரணம் கட்டி அலங்கரிக்க வேண்டும்.

ப+ஜை அறையில் சுத்தமான பலகையில் அழகான கோலம் போட வேண்டும்  அதன் மீது தலைவாழை இலையை நுனி வடக்கு பார்த்து இருக்கும் படி வைக்க வேண்டும்.

அந்த இலை மீது பச்சரியை பரப்பி வைக்க வேண்டும். அரிசியின் மீது களிமண் விநாயகரையோ  அல்லது வழக்கமாக நீங்கள் வணங்கும் பிள்ளையார் விக்ரகத்தையோ எழுந்தருளச் செய்ய வேண்டும்.

விநாயகர் சதுர்த்தியைப் பொறுத்தவரை களிமண் பிள்ளையார் தான் விஷேசம் என்று கூறுவது உண்டு. இலைக்குப் பதிலாக தாம்பாள தட்டையும் கூட பயன்படுத்தலாம்.

படைக்க வேண்டிய நிவேதனங்கள்

பிள்ளையாருக்கு மிகவும் பிடித்தது மோதகம். அதாவது கொழுக்கட்டை. இதில் ஒரு தத்துவமே இருக்கிறது.

கொழுக்கட்டையின் வெளியே உள்ள மாவு பதார்த்தம் அண்டமாகவும்  அதற்குள் இருக்கும் ப+ரணம் பிரம்மமாகவும் ஞானிகளால் உணரப்படுகிறது.

கடலைப்பருப்பு கொழுக்கட்டை  உளுத்தம் பருப்பு கொழுக்கட்டை  தேங்காய் கொழுக்கட்டை  எள்ளு கொழுக்கட்டை  போன்ற கொழுக்கட்டைகளை இறைவனுக்கு படைக்கலாம். இதனுடன் அப்பம்  வடை  சுண்டல்  இட்லி  பொரி  பாயாசம்  அவல் ஆகியவற்றையும் சேர்த்து படைக்க வேண்டும்.

இப்போது பூஜைக்கு தயாராகி இருப்பீர்கள்தானே  வழக்கம் போல  விளக்கேற்றி வைத்து விட்டு கொழுக்கட்டை உள்ளிட்ட நிவேதனங்களை படைத்து  விநாயகருக்கு விருப்பமான அறுகம் புல் மற்றும் எரிக்கம் ப+ மாலை அணிவித்து மனமுருகிப் ப+ஜை செய்ய வேண்டும்.

முதல் நாள் காலையில் ப+ஜையை முடித்து விட்டு மாலையில் விநாயக ஸ்தோத்திரங்களை சொல்லி கற்ப+ர தீபம் காண்பித்து ஆரத்தி எடுக்க வேண்டும்.

இப்படி பூஜை செய்து முடிக்கும் வரைக்கும் உபவாசம் இருப்பது கூடுதல் பலனைக் கொடுக்கும்.

முதல் நாள் பூஜையைத் தொடர்ந்து மறுநாள் புனர்பூஜையைத் தொடர வேண்டும். அன்று தயிர் சாதம்  நைவேத்தியம் செய்ய வேண்டும்.

பின்னர்  குளத்திலோ  கிணற்றிலோ பிள்ளையாரைக் கரைத்து விடலாம்.

எல்லா விரதங்களையும் விட மேலானது இந்த விநாயகர் சதுர்த்தி விரதம். இதனைக் கடை பிடிப்பதனால் தீராத வினைகள் தீரும். அல்லல் அகன்று வசந்தத்திற்கு வழிபிறக்கும்.

பூஜைக்கு உகந்த நேரம்

செப்டம்பர் 15

காலை 7.45 முதல் 8.45 மணி
மாலை 4.45 முதல் 5.45 மணி

விநாயகரின் விந்தைகள்

விநாயகரிடம் மட்டும்தான் நவகிரகங்களின் எந்த செயல்பாடும் செல்லாது. எனவேதான்  பிள்ளையார்பட்டியில் நவகிரகங்கள் அமர்ந்த நிலையில் இருக்கும். நவகிரகங்களினால் ஆட்டுவிக்கப்படுபவர்கள் கணபதியிடம் சொல்லி முறையிடலாம்.

விநாயகர் தலங்களில் பள்ளியறை  இருப்பது பாண்டிச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் ஆலயத்தில் மட்டும்தான். இங்கு நடராஜரைப் போல நர்த்தன விநாயகரைக் காண முடியும். இங்கு மூலவர் சிலை கிணறு அல்லது குளம் மீது அமைந்திருப்பதாக கூறுகிறார்கள்.

தென்னகத்தில் பிரம்ச்சாரியாக போற்றப்படும் விநாயகப் பெருமான் வடக்கே சித்தி  புத்தி என்ற இரண்டு மனைவிகளுடன் அருள்பாளிகிறார்.

விநாயகர் சில தலங்களில் பெண்ணாகவும் காட்சியளிக்கிறார். பெண் வடிவிலான விநாயகர் சக்தி கணபதி  விநாயகி  விக்னேஸ்வரி  கணேஸ்வரி என்றும் வழங்கப்படுகிறார்


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code