| சகலகலாவல்லி சரஸ்வதியை வரவேற்போம் |
பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்கூட்டும்படி உன்கடைக்கண்நல்காய்! உளம்கொண்டு தொண்டர் தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம்தெளிக்கும் வண்ணம் காட்டும் வெள் ஓதிமப்பேடே! சகல்கலாவல்லியே! பொருள் : கலைத்தமிழாகிய சுவையான பால் அமுதத்தை, மனம் உவந்து தொண்டர்கள் படைக்கின்றனர். அதனைத் தெளிவுறசெய்யவல்ல வெண்ணிறப் பெண் அன்னம் போன்ற சகலகலாவல்லியே! பாடலையும் அதன் பொருளையும், பொருளால் ஏற்படக்கூடிய பயனையும் என்னிடத்தில் சேருமாறு உன் கடைக்கண் பார்வையை அருள்வாயாக! - குமரகுருபரின் சகலகலாவல்லி மாலை- தமிழர்கள் பன்னெடுங்காலமாக வணங்கிவரும் தெய்வங்களில் சரஸ்வதியும் ஒருவள். நவராத்திரியின் ஒன்பதாம் நாள் பண்டிகையில் முக்கியமானதாக ஆயுதபூஜை கருதப்படுகிறது. நான்முகன் பிரம்மாவின் மனைவி சரஸ்வதி. இவள் கல்விக்கும், கலைகளுக்கும் அதிபதியாக விளங்குகிறாள். வெண்பட்டு உடுத்தி, கைகளில் வீணையும், ஏட்டுச்சுவடியும் ஏந்தி கல்விக்கும், ஏனைய கலைகளுக்கும், அதிபதியாக வெண் தாமைரையில் வீற்றிருக்கும் அம்பாளை இந்நாளில் வணங்கி எல்லா வளமும் பெற்று இன்புற்றிருப்போம். அள்ள அள்ள குறையாக கல்விச் செல்வத்தை அள்ளித் தருபவள் கலைமகள். அதனால்தான், இந்நாளில் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது நமது முன்னோர்கள் வழக்கம். முற்காலத்தில் சரஸ்வதி பூஜை தினத்தன்றுதான் குழந்தைகளுக்கு வித்யாரம்பம்(கல்வி கற்க அனுப்புவது) நடைபெறும். இது இப்போதும் நடைமுறையில் உள்ளது, நகரங்களிலும், கிராமங்களிலும் சரஸ்வதி பூஜையன்று பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. புலவர்களின் செல்வாக்காலும், கல்வியின் முக்கியத்துவத்தாலுமே நாமகளின் வழிபாடு சிறந்து விளங்கி பரவியது. வேறு தெய்வங்களை முழுமுதற்பொருளாக வணங்கி வந்த பெரும்புலவர்களும் கூட நாமகளைத் துதிக்கத் தவறவில்லை. எனவே அவர்களோடு சேர்ந்து நாமும் வழிப்பட்டு அவளின் அருள் கிடைக்கப் பெறுவோம். எப்படி பூஜை செய்யலாம்...? சரஸ்வதி படத்தை வைத்துக்கொண்டு அதன் அருகே விளக்கேற்றிவைத்து, முன்னால் ஒரு வெண்ணிறத் துணியை விரித்து, அதன்மீது புத்தகங்கள், எழுதுகருவிகள் போன்றவற்றை வைத்து வழிபட வேண்டும். வியாபார நிறுவனங்களாக இருந்தால், தொழிலுக்குரிய சாதனங்களை வைத்து அதில், சந்தனம், குங்குமம் இட்டு வழிபடலாம். இவற்றுடன் பொரி, சுண்டல், பழங்கள் போன்றவைகளைப் அம்பாளுக்குப் படைக்க வேண்டும். ஊதுபத்தி. சாம்பிராணி. மலர்கள். கற்பூற தீபம். வெற்றிலைபாக்கு, மஞ்சள், குங்குமம், விபூதி என்று கிடைப்பதை வைத்து வழிபடலாம். வழிபாடு துவங்குவதற்கு முன்னர் சகலகலாவல்லி மாலையை சொல்லி முழு மனதுடன் மனமுருகிப் பிரார்த்திக்கலாம். பூஜை செய்ய நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 வரை மாலை 4.45 முதல் 5.45 வரை - அக்.20 சரஸ்வதி பூஜை. -
Write Comment |
||||
மற்றவை
- மஹாசிவராத்திரி கோலாகலம்
- கபாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
- பரம்பொருளே பார்த்தசாரதி
- திருக்கோஷ்டியூரில் மாசித் திருவிழா
- பார் போற்றும் பக்ரீத்
- தினம் தினம் தீபாவளி
- திருகார்த்திகை தீபத் திருநாள்
- சகலகலாவல்லி சரஸ்வதியை வரவேற்போம்
- கொழு வைக்கலாம் வாங்க!
- வினை தீர்க்க வாரயோ விக்னேஸ்வரா...
பகுதி:: கட்டுரைகள்

பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்


