அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
பார் போற்றும் பக்ரீத்
Friday, 21 December 2007

 'இஸ்லாம்' என்றாலே, 'இறைவனிடம் அடைக்கலம்' என்று பொருள். அதனடிப்படையில் இறைவனிடம் அடைக்கலாமாகத்தான் இந்த ஹஜ் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

இஸ்லாம் மக்கள் தொகை அடிப்படையில் உலகிலேயே இரண்டாவது பெரிய சமயமாகும். இது, கிபி ஏழாம் நூற்றாண்டில் இன்றைய சவுதி அரேபியாவில் வாழ்ந்த முகமது நபி என்பவரை இறுதி இறைத்தூதராக இறைவனால் தேர்ந்தெடுத்து நிறைவு செய்யப்பட்டதாக உலகளாவிய முஸ்லிம் மக்கள் கருதுகின்றனர். முஸ்லிம்கள் இறைவனை அல்லாஹ் என்றே அழைக்கின்றனர்.

இஸ்லாமியர்களின் ஐந்து முக்கிய் கடமைகளில் முக்கியமானதாக கருதப்படுவது 'ஹஜ்' எனும் இறுதிப் பயணம். இதன்படி உடல் நலமும் பொருள் வசதியும் உள்ளவர்கள் மக்காவில் இருக்கும் கஅபா எனும் ஆலயத்தை வாழ்நாளில் ஒருமுறையேனும் தரிசிக்க புனிதப் பணயம் மேற்கொள்ள வேண்டும்.

உலகில் எல்லா முஸ்லிம் சகோதரர்கள் எல்லாரும் மெக்காவில் ஒன்று கூடி இறைத்தூதர் நபிகள் நாயகத்தை நினைவு கூறுகின்றனர். எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ்வை வணங்கி தங்கள் கடமையை நிறைவு செய்கின்றனர். இதையே தியாகத் திருநாளாகக்(பக்ரீத்) கொண்டாடி வருகிறோம்.

நபிகள் நாயகத்தின் தந்தை நபி இப்ராஹிம்(அலை) தனது மகன் இஸ்மாயில்(அலை) அவர்களை அறுத்து உயிர்ப்பலி இட எத்தணித்த நிகழ்வையே இத் தியாகத் திருநாளில் நினைவூட்டப்படுகிறது.

இத்திருநாளில் ஆடு அல்லது ஒட்டகத்தை இறைவனுக்கு குர்பானி கொடுப்பதாலேயே பக்ரீத் என்று பெயர் நிலவுவதாகக்க் கூறப்படுகிறது.(பக்ரி என்றால் ஆடு).

ஈமான் என்றால் நம்பிக்கை, ஒரு முஸ்லிம் பெற்றுள்ள எண்ணிலடங்கா அருட்கொடைகளில் ஈடிணையற்றது அவன் பெற்றுள்ள ஈமான்தான். இவ்வுலக வாழ்வாதாரம் அனைத்தையும் இழந்த ஒருவரிடம் ஈமானுடன் அதற்குரிய செயல்பாடுகளும் இருப்பின் நிச்சயமாக அவர் ஈருலகிலும் வெற்றியடைந்து விட்டார்.  

வசதி படைத்தவர்கள் இறைவனுக்கு குர்பானி கொடுத்து ஈமானைப் பெறமுடியும் என இத்திருநாளில் இஸ்லாமியர் நம்புகின்றனர்.

 

 




Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code