| கபாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் |
| Thursday, 28 February 2008 | ||||
சென்னை : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் இன்று சீரும் சிறப்புமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனின் அருள் பெற்றனர். கடந்த ஆண்டு இடி தாக்கியதில் கபாலீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் லேசான சேதம் ஏற்பட்டது. இதனைச் சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து ரூ. 8 லட்சம் செலவில் ராஜகோபுர திருப்பணிகள் நடந்தது. கோபுரம் முழுவதும் பஞ்சவர்ணம் பூசப்பட்டது. இன்று கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி கடந்த மூன்று நாட்களாக யாக பூஜைகள் நடந்து வந்தது. யாக பூஜைகள் நிறைவடைந்த பின், புனித கலசங்கள் கோயிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. கோபுரத்தின் உச்சியில் அமைந்துள்ள 9 கும்ப கலசங்களுக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்பு இன்று காலை 9.00 மணிக்கு புனித நீரை கோபுர கலசங்கள் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. வேத மந்திரங்கள் ஓத கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. கும்பாபிஷேகத்தை நேரில் காண, ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். பக்தர்கள் மீதும் கும்பாபிஷேக புனித நீர் தெளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், சென்னை மாநகர மேயர் மா.சுப்ரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் கு.பிச்சாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Write Comment |
||||
மற்றவை
- மஹாசிவராத்திரி கோலாகலம்
- கபாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
- பரம்பொருளே பார்த்தசாரதி
- திருக்கோஷ்டியூரில் மாசித் திருவிழா
- பார் போற்றும் பக்ரீத்
- தினம் தினம் தீபாவளி
- திருகார்த்திகை தீபத் திருநாள்
- சகலகலாவல்லி சரஸ்வதியை வரவேற்போம்
- கொழு வைக்கலாம் வாங்க!
- வினை தீர்க்க வாரயோ விக்னேஸ்வரா...
பகுதி:: கட்டுரைகள்

சென்னை : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் இன்று சீரும் சிறப்புமாக நடந்தது. இதில் ஏராளமான 


