| தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள் |
| Thursday, 20 March 2008 | ||||
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று நிதியமைச்சர் அன்பழகன் 2008-09 ஆண்டுக்கான பட்ஜட்டைத் தாக்கல் செய்தார்.தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மறைந்த முன்னாள் சபாநாயகர் ராஜாராம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. ஹமேச்சந்திரன் முன்னாள் எம்.எல்.ஏ தங்கவேல் இவாஞ்சலிஸ்ட் டி.ஜி.எஸ். தினகரன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்தி வைக்கப்பட்டது. இன்று காலை நிதியமைச்சர் அன்பழகன் திமுக ஆட்சியின் 3வது பட்ஜட்டைத் தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள்: 254 பாலங்கள் கட்ட திட்டம் பாலங்கள் கட்ட ரூ. 2816 கோடி ஒதுக்கீடு 11476 கி.மீ சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் சாலை மேம்பாட்டு மற்றும் பராமரிப்புக்காக ரூ. 3957 கோடி ஒதுக்கீடு நெடுஞ்சாலைத்துறைக்காக ரூ. 4129 கோடி ஒதுக்கீடு தொழில் முனைவோராக உள்ள அரவாணிகளுக்கு கூடுதல் மூலதன மானியம் மின் வினியோக கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 1720 கோடி புதிய மின் நிலையங்கள் உருவாக்க திட்டம் 350 பஸ்கள் வாங்க திட்டம் கங்கைக்கொண்டானில் 250 ஏக்கரில் வர்த்தக பொருளாதார மண்டலம் எய்ட்சால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 5 கோடி அறக்கட்டளை அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அரசு பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்ப்பு அதிகரிப்பு அனைத்திந்திய அரசு மகளிர் கல்லூரிகளுக்கு சுற்றுச் சுவர் கட்டப்படும் தமிழில் முதலிடம் பெறும் 100 மாணவர்களுக்கு கம்ப்யட்டம் பரிசு 200 பள்ளிகளில் நூலகங்கள் அமைக்கப்படும் 500 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யுட்டர் வசதியுடன் மொழி ஆய்வு மையம் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்க ரூ. 112 கோடி. 450 பள்ளிகளுக்கு புதிய கட்டடம் கட்ட ரூ. 150 கோடி வங்கி உதவி 100 உயர்நிலைப்பள்ளிகளில் மேல்நிலைப் பள்ளிகளாகின்றன காவல் நிலையங்களுக்கு இன்டர்நெட் வசதி காவிரி கொள்ளிடத்தில் வெள்ள தடுப்புக்கு ரூ. 211 கோடி மதுரையில் வெள்ளப் பெருக்குகளை தடுக்கு ரூ. 12 கோடியில் திட்டம் நதிகள் இணைப்புக்கு மத்திய அரசிடம் நிதியுதவி கோரிக்கை தமிழக நதிகளை இணைக்க திட்டம்
Write Comment |
||||
மற்றவை
- தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்
- 'முதலீடுகளுக்கு ஆதரவான பட்ஜெட்'
- தொலைநோக்குப் பார்வையில்லை: சிபிஐ
- எது விலை குறையும்?
- பட்ஜெட் - தொழிலதிபர்கள் கருத்து
- சென்னை : கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்
- விவசாயக் கடன்கள் தள்ளுபடி
- வருமான வரி உச்சவரம்பு உயர்வு
- பார்லி.,யில் பட்ஜெட் தாக்கல்
- பட்ஜெட் : தலைவர்கள் கருத்து
பகுதி:: Budget news

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று நிதியமைச்சர் அன்பழகன் 2008-09 ஆண்டுக்கான பட்ஜட்டைத் தாக்கல் செய்தார்.


