அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
பட்ஜெட் : தலைவர்கள் கருத்து
Wednesday, 27 February 2008
 சென்னை : மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் பார்லிமென்ட்டில் சலுகை பட்ஜெட்டை அறிவித்தார். இதனை வரவேற்றும், எதிர்த்தும் பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

முதல்வர் கருணாநிதி :

அனைத்து தரப்பு மக்களுக்கும் அனைத்து வகையிலும் மன நிறைவு அளிக்கும் ஒரு சிறந்த ரயில்வே பட்ஜெட்டை அளித்துள்ள ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்த்தை நான் பாராட்டுகிறேன். குறிப்பாக சாமானிய மக்கள் பயணம் செய்யும் இரண்டாம் வகுப்பு கட்டணத்தை 5 சதவீதம் குறைத்து இருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.

இது தவிர மற்ற பயணக் கட்டணங்களையும், சரக்கு கட்டணங்களையும் குறைத்துள்ளதும்,  பயணியர் வசதிகள் மற்றும் பயணியர் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு ரெயில்வே அமைச்சர் இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளித்திருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான விழுப்புரம்-திண்டுக்கல் ரயில் பாதையை இருவழித் தடமாக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததற்காக நான் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெயலலிதா :

வரவிருக்கும் லோக்சபா தேர்தலை மனதில் வைத்து இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் எந்தவித தொலைநோக்குப் பார்வையில்லை.

ரயில்வே பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்விக்கும் பட்ஜெட்டாக இருக்கும், என அமைச்சர் லாலு தெரிவித்திருந்தார். இந்த பட்ஜெட் அவரை வேண்டுமானால் மகிழ்விக்கும் பட்ஜெட்டாக இருக்க முடியும்.  சாதாரண மக்கள் பயன்பெறும் வகையில் இந்த பட்ஜெட்டில் எந்தவித திட்டமும் இடம்பெற வில்லை.

ரயில்வேக்கு ரூ. 25 ஆயிரம் கோடி லாபம் கிடைத்திருப்பதாக லாலு தெரிவித்துள்ளார். ஆனால், அந்த அளவிற்கு சலுகை திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. ஏசி வகுப்பிற்கு ஏழு சதவீதமும், இரண்டாம் வகுப்பிற்கு ஐந்து சதவீதமும் கட்டணத்தைக் குறைத்திருப்பது துரதிஷ்டவசமானது.

சாதாரண இரண்டாம் வகுப்பிற்கு அல்லவா ஏழு சதவீதம் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த முழுக்க முழுக்க வாக்கு வங்கிகளை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளது.  இதில் தொலைநோக்குப் பார்வை இல்லை.

காங்.,தலைவர் எம்.கிருஷ்ணசாமி :

ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு ஏற்றம் தரும் வகையில் ரயில்வே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்து 9 புதிய ரயில்கள், கர்ப்பிணி பெண்களுக்கு தனி ரயில் பெட்டி போன்ற அறிவிப்புகள் வரவேற்கத் தக்கது. மேலும் பயண கட்டண சலுகை, மூத்த குடிமக்களில் பெண்களுக்கு கட்டண சலுகை ஆகிய திட்டங்கள் வரவேற்க வேண்டியவை.

டாக்டர் ராமதாஸ் :

நாட்டின் அனைத்து பகுதிகளையும், அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்விக்கும் வகையில் இந்த ஆண்டு சிறப்பான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. சாதாரண மக்கள் பயணிக்கும் இரண்டாம் வகுப்பு முதல் அனைத்து வகுப்பு கட்டணங்களும் குறைக்கப்பட்டிருப்பது இதுதான் முதல்முறை என்றே கூறலாம். இதன் மூலம் மக்களின் நண்பனாக ரயில்வே துறையை மாற்றிய மத்தியமைச்சர் லாலு, இணையமைச்சர் வேலு அனைத்து தரப்பு மக்களின் பாராட்டுதலைப் பெற்றுள்ளனர்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code