அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
சென்னை : கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்
Friday, 29 February 2008
 புதுடில்லி : நிதியமைச்சர் ப. சிதம்பரம் இன்று பார்லியில் பட்ஜெட் உரையைத் தாக்கல் செய்தார். அவரது உரையின் போது வெளியிட்ட அறிவிப்புகள்.

* ராஜிவ் காந்தி தேசிய கல்வித் திட்டத்திற்கு ரூ. 75 கோடி ஒதுக்கீடு
* சென்னைக்கு அருகே கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் ரூ.300 கோடி ஒதுக்கீடு
* தேசிய ஊனமுற்றோர் மேம்பாட்டு கழகத்திற்கு ரூ. 9 கோடி ஒதுக்கீடு
* தேசிய் சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகத்திற்கு ரூ. 75 கோடி ஒதுக்கீடு
* நாட்டின் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக ரூ. ஆயிரத்து 350 கோடி
* ராஜிவ் காந்தி குடிநீர் மிஷனுக்கான உதவித் தொகை அதிகரிப்பு
* மத்திய துணைநிலைப் படைகளில் சிறுபான்மையினருக்கு கூடுதல் பணி வாய்ப்பு
* கிராமப்புற சுகாதார நடவடிக்கையை வலுப்படுத்த ரூ. 12 ஆயிரத்து 50 கோடி
* பள்ளிகளில் குடிநீர் வசதிக்காக ரூ.200 கோடி
* சிறுபான்மையினர் நல அமைச்சகத்திற்கான நிதி ரூ. ஆயிரம் கோடியாக (இரண்டு மடங்காக) உயர்வு  
* சிறுபான்மை நகரங்களில் 288 பொதுத்துறை வங்கிகள்
* எல்லைப் பகுதிகளின் வளர்ச்சிக்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு
* போலியோ தடுப்பு நடவடிக்கைக்காக ரூ. ஆயிரத்து 42 கோடி
* விவசாய கடனுக்காக ரூ.2.80 லட்சம் கோடி வழங்க திட்டம்
* பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சக வளர்ச்சிக்கு ரூ. ஏழாயிரத்து 200 கோடி
* குழந்தைகள் வளர்ச்சிக்கு 24 சதவீத கூடுதல் நிதி ஒதுக்கீடு
* ஏலக்காய் மற்றும் காபி உற்பத்திக்கு கூடுதல் நிதி
* ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்திற்கு ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் கோடி
* தேசிய தோட்டக்கலை மிஷனுக்கு ரூ. ஆயிரத்து 100 கோடி நிதி
* ஏஐபிபி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நீர்பாசனத் திட்டத்திற்கு ரூ. 20 ஆயிரம் கோடி நிதி
* தேயிலை ஆராய்ச்சி அமைப்பிற்கு சிறப்பு நிதியாக ரூ.20 கோடி
* சிறு நீர்ப்பாசன திட்டத்திற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு
 






Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code