அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
த்ரிஷாவை பின்னுக்கு தள்ளிய நயன்தாரா
Saturday, 05 July 2008

 தமிழ்திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளார் நயன்தாரா...

மலையாளத்தில் வெளியான மனசின் அக்கரை திரைப்படமே நயன்தாராவின் முதல்படம். இதில் ஏழை கம்யூனிச தம்பதியின் ஒரே மகளாக நடித்திருந்தார் நயன். ஜெயராம், செம்மீன் ஷீலா ஆகியோர் நடித்திருந்த மனசின் அக்கரையில் அறிமுகமான நயன்தாரவின் இன்றைய வளர்ச்சி பிரமிப்பானது.

இதற்கு அடித்தளமாக அமைந்தது ஹரியின் 'ஐயா'. சரத்குமார் ஜோடியாக நயன்தாரா நடித்த இந்ததப் படமே நயன்தாராவின் முதல் தமிழ்ப்படம். பிறகு ரஜினி  ஜோடியாக சந்திரமுகி. அத்தோடு தெலுங்கிலும் முன்னணி நடிகையானார்.

 

'குசேலன்', 'சத்யம்', 'ஏகன்', 'வில்லு' என இப்போதைக்கு இவர்தான் கோலிவுட்டின் டாப் ஹீரோயின்!

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் படத்தில் நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்திற்கு தென்னிந்தியாவின் காஸ்ட்லி நடிகைகள் த்ரிஷா, இலியானா வாங்கும் சம்பளத்தைவிட அதிகமாக நயன்தாராவுக்கு சம்பளம் பேசப்பட்டுள்ளது. சுமார் 1.2 கோடி என்கிறது கோடம்பாக்கம். குசேலன் வெளிவந்தால் இந்த சம்பளத்திற்கும் சிக்கமாட்டார் நயன்தாரா என்பதுதான் நிலைமை.




Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code