| சத்யம் செலவு 23 கோடி |
| Thursday, 24 July 2008 | ||||
சத்யம் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. நேற்று படத்தின் ஹீரோ விஷாலும், டைரக்டர் ராஜசேகரும் நிருபர்களை சந்தித்தனர். அப்போது ராஜசேகர் கூறியதாவது:-"ஒரு நடிகையாக இருப்பதால் மட்டுமே நயன்தாராவை கவர்ச்சியாக காட்ட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. படத்தின் கதைக்கு ஏற்ப, கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப நயன்தாரா நடித்து இருக்கிறார். அவரை கவர்ச்சியாக நடிக்கும்படி நாங்கள் வற்புறுத்தவில்லை. ஒரு பாடல் காட்சியில் மிக நெருக்கமாக நடிக்க வேண்டும் என்று கதை சொன்னபோதே அவரிடம் கூறப்பட்டது. நயன்தாரா அதற்கு சம்மதித்தார். சத்யம் படம் ரூ.3கோடியில் இருந்து 4 கோடிக்குள் முடித்துவிடலாம் என்று முதலில் திட்டமிடப்பட்டது. இப்போது அந்தப் படத்தின் மொத்த செலவு ரூ.23 கோடியாகி விட்டது. தமிழ்-தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் திரைக்கு வர இருக்கிறது. தெலுங்கு படத்துக்கு 'சல்யூட்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இரண்டு மொழிகளிலும் சேர்த்து 600 பிரிண்ட்கள் போடப்படுகின்றன" என்றார்.
Write Comment |
||||

சத்யம் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. நேற்று படத்தின் ஹீரோ விஷாலும், டைரக்டர் ராஜசேகரும் நிருபர்களை சந்தித்தனர். அப்போது ராஜசேகர் கூறியதாவது:-

