அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
சந்தோஷ் சுப்ரமணியம்
Tuesday, 15 April 2008
 ஜெயம் ரவியை மிக கண்டிப்பாக வளர்க்கும் தந்தையாக பிரகாஷ்ராஜ் இருக்கிறார். கீரத்துடன் ஜெயம்ரவியை திருமணம் செய்ய நிச்சயமாகிறது. கல்யாணத்தை தன் விருப்பப்படி செய்ய நினைக்கு கதையின் ஹீரோ ஜெனலியாவை கண்டதும் காதல் கொள்கிறார்.

விஷயம் பிரகாஷ்ராஜுக்கு தெரியவர வழக்கம் போல் கத்தல். பெண்ணை நிச்சயித்த பிறகு வேறு பெண்ணை காதலிப்பது தவறு என்று கூறுகிறார். பிறகு சமாதானமான பிரகாஷ்ராஜ் ஜெனிலியாவை நம் வீட்டுக்கு அழைத்து வந்து 7 நாள் தங்க வை. வீட்டில் உள்ளவர்களுக்கு பிடித்தால் கட்டி வைக்கிறேன் என்கிறார்.

சவாலை ஏற்கும் ரவி ஜெனிலியாவுடன் வருகிறார். அவரது சுட்டித்தனம் குடும்பத்தாரை கவர்கிறது. பிறகென்ன? இதிலிருந்து சிக்கல் ஆரம்பிக்கிறது... நிச்சயித்த பெண்ணையே திருமணம் செய்து வைப்பதா? அல்லது அனைவரும் கவர்ந்த ஜெனிலியாவை திருமணம் செய்து வைப்பதா? இந்த பிரச்சனையில் ஜெனிலியா வீட்டிலிருந்து வெளியேறுகிறார். பிரிந்த ஜோடி இணைகிறதா? ஏற்கனவே நிச்சயித்த கீரத் கதி என்ன? என்பதற்கு நெகிழ்ச்சியான விடையை சொல்கிறது கிளைமாக்ஸ்.

காதலுக்கு ஏங்கும் ஹீரோ ஜெயம் ரவி கண்டிப்பான தந்தை பிரகாஷ்ராஜ் வெகுளித்தனத்தை விட்டால் வேறெதுவும் தெரியாத ஜெனிலியா என இவர்களைச் சுற்றித்தான் சுழல்கிறது கதை.

ஜெயம்ரவி டி-ஷர்ட் மாட்டிவரும் ரவியிடம் அது நல்லாயில்ல இந்த சட்டய போட்டுகிட்டுவா என்று ஒரே வார்த்தையில் பிரகாஷ் அடக்கிப்போடும் முதல் காட்சியிலேயே கேரக்டரின் பிடிவாதம் தெரிந்துவிடுகிறது.

டூர் போவதாக பொய் சொல்லி ஜெனிலியாவை ரவியின் வீட்டுக்கு அனுப்பிவிட்டு அவரது தந்தை சாயாஜி ஷிண்டேயிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க மாறுவேடத்தில் திரியும் எம்.எஸ்.பாஸ்கர் வயிற்றை பதம் பார்க்கிறார். ஜெயம்ரவி ஜெனிலியா பிரகாஷ்ராஜ் கவுசல்யா கீரத் சந்தானம் சத்யன் பிரேம்ஜி ஸ்ரீநாத் என ரவியின் சக நண்பர்களும் நகைச்சுபை பந்தி வைக்கின்றனர். தயாரிப்பு: ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட்ஸ். டைரக்ஷன்: எம்.ராஜா (ஜெயம்ரவியின் அண்ணன்) இசை: தேவிஸ்ரீ பிரசாத்.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code