அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
தங்கம்
Monday, 11 February 2008
 வழக்கமான அண்ணன் தங்கச்சி பாசத்தை மையமாக வைத்துதான் தயாராகி இருக்கிறது தங்கம். நல்லவேளை கவுண்டரின் கலக்கல் மட்டும் இல்லை என்றால் தங்கம் தகரமாகி இருக்கும்.

தங்கச்சிக்காக தனி பஸ்சே வாங்கிக் கொடுக்கிற அளவுக்கு பாசம் வைத்திருக்கிறார் அண்ணன் சத்யராஜ்.  அப்படிப்பட்ட தங்கச்சியை வில்லன் கெடுத்து விட, வழக்கம் போல், கெடுத்தவனுக்கே கல்யாணம் செய்து வைக்கிறார். வில்லன் மீதான கொலைப் பழியை தான் ஏற்று தங்கைக்காக சிறை செல்கிறார் சத்யராஜ். அந்த பிளாஸ்பேக்கில் நகர்கிறது கதை.

பார்த்து பார்த்து போரடித்து விட்ட 1980 காலப் படத்தை அப்படியே கொடுத்திருக்கிறார் இயக்குனர்(ரொம்ப தைரியம்தான்). கவுண்டமணியின் காமெடிதான் ரசிகர்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைக்கிறது.

'ஏம்பா, விலக சொன்னா அவங்க விலகமாட்டாங்களா?' 'எதுக்கு அந்தரத்திலே இருந்து குதிக்கிறே?' 'நீங்கள்ளாம் வேல் படத்திலே நடிச்சவங்களா? இப்படி தமிழ் ஹீரோக்களின் பில்டப்பை பிய்த்து எரிகிறார் கவுண்டர்.

எப்படித்தான் சத்யராஜைப் பார்த்ததுமே மேகா நாயருக்கு காதல் வருகிறதோ தெரியவில்ல ை. அலுத்துப் போய் விடுகிறது.

சந்தையில் அறிமுகமாகி, சத்யராஜை லபக் செய்துவிடும் மேகா நாயர், அவர் ஜெயிலுக்கு போய் வரும் வரை முதலிரவு கொள்ளாமல் இருப்பது பரிதாபம். மீண்டும் சேரப் போகும்போது மாமனாரின் மரணம்! பரிதாபம்.

தங்கச்சியாக நடித்திருக்கும் ஜெயஸ்ரீக்கு தங்கச்சிகளுக்கேயுரிய அழகிய புன்னகை. நடிப்பும், குரலும் மனசை விட்டு அகலாது.

சண்முகராஜா, மகாதேவன், பாலாசிங் இவர்கள் எல்லாம் வில்லன்கள். இவர்களின் நடிப்பிலும், நடவடிக்கைகளிலும் என்றும் மாறாத பழமை. ஸ்ரீகாந்த் தேவா இசையில் ஒன்றிரண்டு பாடல்கள் முணுமுணுக்கலாம்.

ஜி.கிச்சா இயக்கியிருக்கிறார். நல்லவேளை கவுண்டரை கொண்டு கிச்சு கிச்சு மூட்டினார். இல்லையென்றால் தங்கம் பித்தளையாக பல்லை காட்டியிருக்கும்!

தங்கம் பெயரில் மட்டும்தான்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code