| கவர்ச்சிக்கு 'நோ' : கோபிகா |
| Friday, 28 December 2007 | ||||
'ஆட்டோகிராப்'பில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் மஞ்சம் அமைத்து உட்கார்ந்திருக்கும் மலையாள வரவு கோபிகா.பிரகாஷ்தயாரிப்பில் உருவாகி வரும் படம் வெள்ளித்திரை. இப்படத்தில் கோபிகா கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தில் கவர்ச்சியாக அவர் நடிப்பதாக செய்திகள் வெளியானது. அது குறித்து அவர் என்ன சொல்கிறார். 'வெள்ளித்திரை' படத்திற்கு இன்னும் ஒரு பாடல் காட்சிதான் படமாக்க வேண்டியுள்ளது. முதலில் வெளிநாடுகளுக்கு சென்று படமாக்க திட்டமிட்டார்கள். அங்கு பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் அத்திட்டம் கைவிடப்பட்டது. இப்போது மூணாறில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். நடிகையாகவே இதில் நடிக்கிறேன். இப்படத்தில் கவர்ச்சியாக நடிக்கிறீர்களா என்று கேட்கிறார்கள். இதுவரை எந்த படத்திலும் கவர்ச்சியாக நடிக்கவில்லை. நடிகை வேடம் என்பதால் கவர்ச்சி காட்ட வேண்டும் என யார் சொன்னது? நான் நிஜத்திலும் நடிகை. ஆனால் எந்த படத்திலும் கவர்ச்சி காட்டவில்லை. அதே போலத்தான் 'வெள்ளித்திரை' யிலும் நடித்திருக்கிறேன், என்றார்.
Write Comment |
||||
மற்றவை
- சரத்குமாருடன் ஜோடி சேரும் சினேகா
- தனுஷ் படத்திற்கு ரஜினி பெயர்
- பிரகாஷ்ராஜ் நடிக்கும் சத்யராஜ்
- பார்பராக பணிபுரியும் வடிவேல்
- கவுதம் இயக்கத்தில் அஜீத்
- டி.ஆரின் 'ஒருதலை ராகம்'
- பாரதிராஜா இயக்கும் புதிய படம்
- தாமதமாகும் பயணிகள் கவனத்திற்கு....
- ஐஸ் நடிக்கும் புத்தர் படம்
- விஜய் நடிக்கும் ஆண்டவன்
பகுதி:: முன்னோட்டம்

'ஆட்டோகிராப்'பில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் மஞ்சம் அமைத்து உட்கார்ந்திருக்கும் மலையாள வரவு கோபிகா.

