| சரத்குமார் காயம் |
| Thursday, 10 January 2008 | ||||
கோலாலம்பூர்: படப்பிடிப்பின் போது நடிகர் சரத்குமாருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.நடிகர் சரத்குமார்-ஜெயசுதா ஜோடியாக நடிக்கும் படம் 1997. இப்படத்தின் சூட்டிங் மலேசியாவில் கடந்த ஒரு மாதகாலமாக நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, இப்படத்திற்காக சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அதில் டூப் இல்லாமல் நடித்த சரத்குமார் காலில் உருட்டுக் கட்டை பட்டு காயம் ஏற்பட்டது. காலில் ரத்தம் சொட்டியது. உடனடியாக, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். டாக்டர்கள் 10 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் எனக் கூறியதால், அவர் சம்பந்தப்படாத காட்சிகளை தற்போது படமாக்கி வருகின்றனர். சரத்குமார் காயமுற்ற தகவலை அறிந்ததும், அவரது மனைவி ராதிகா உடனடியாக மலேசியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
Write Comment |
||||
மற்றவை
- தசாவதாரம் திரைப்படம் ஜுன் 13 ல் ரிலீஸ்
- ஐபிஎல் அணி விளம்பரத்தில் நயன்
- அஜீத் மகள் பெயர் அனோஷ்கா
- யுவனுக்கு செல்வராகவன் கல்தா
- கவலையில் தங்கர்பச்சான்
- விஜய் விரும்பிய 'அஞ்சாதே'
- தெலுங்கிலும் 'ஜோதா அக்பர்'
- சின்னத்திரையில் பிஸியான சிம்ரன்
- விழிப்புணர்வு படத்தில் விவேக்
- சர்சைக்குப் பெயர்போன பத்மபிரியா
பகுதி:: கோலிவுட் செய்திகள்

கோலாலம்பூர்: படப்பிடிப்பின் போது நடிகர் சரத்குமாருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

