| மன்னிப்பு கேட்டார் ஸ்ரேயா |
| Thursday, 17 January 2008 | ||||
முதல்வர் கருணாநிதி பங்கேற்ற திரைப்பட விழாவில் கவர்ச்சி உடையில் பங்கேற்றதற்காக மன்னிப்பு கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் நடிகை ஸ்ரேயா.அண்மையில் `சிவாஜி' படத்தின் வெள்ளிவிழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடந்தது. இவ்விழாவில் மிகுந்த கவர்ச்சியான உடையில் வந்தது குறித்து இந்து மக்கள் கட்சியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் அண்ணாசதுக்கம் போலீசில் ஸ்ரேயா மீது புகார் கொடுத்திருந்தார். இதற்கிடையே தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்து, மன்னிப்பும் கோரி முதல்வர் கருணாநிதி, ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் மற்றும் டைரக்டர் ஷங்கர் ஆகியோருக்கு ஸ்ரேயா கடிதம் அனுப்பியுள்ளார். அவர் தனது கடிதத்தில், 'யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்று நான் கவர்ச்சியாக உடை அணிந்து வரவில்லை. தஞ்சையில் நடந்த இந்தி படப்பிடிப்பில் கலந்துவிட்டு நேரடியாக `சிவாஜி' படவிழாவுக்கு வந்தேன். இந்துக்களையோ அல்லது தமிழர்களையோ அவமரியாதை செய்யும் எண்ணம் எனக்கு இல்லை. தமிழ் பண்பாட்டின் மீதும், இந்து மதத்தின் மரபுகள் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன், என்றார்.
Write Comment |
||||
மற்றவை
- தசாவதாரம் திரைப்படம் ஜுன் 13 ல் ரிலீஸ்
- ஐபிஎல் அணி விளம்பரத்தில் நயன்
- அஜீத் மகள் பெயர் அனோஷ்கா
- யுவனுக்கு செல்வராகவன் கல்தா
- கவலையில் தங்கர்பச்சான்
- விஜய் விரும்பிய 'அஞ்சாதே'
- தெலுங்கிலும் 'ஜோதா அக்பர்'
- சின்னத்திரையில் பிஸியான சிம்ரன்
- விழிப்புணர்வு படத்தில் விவேக்
- சர்சைக்குப் பெயர்போன பத்மபிரியா
பகுதி:: கோலிவுட் செய்திகள்

முதல்வர் கருணாநிதி பங்கேற்ற திரைப்பட விழாவில் கவர்ச்சி உடையில் பங்கேற்றதற்காக மன்னிப்பு கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் நடிகை ஸ்ரேயா.

