அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
நலமாய் உருவாகுது 'யாவரும் நலம்'
Tuesday, 29 January 2008
 'அட்லாப்ஸ்' நிறுவனத் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'யாவரும் நலம்'.

விக்ரம் கே.குமார் இயக்கும் இப்படத்தில் மாதவன் நாயகனாக நடிக்கிறார். 'ஆள்வந்தான்' புகழ் ஷங்கர் - ஏஷான் - லாய் இசை என இப்படி நட்சத்திர அந்தஸ்து பெற்றவர்களின் கூட்டணியில் நலமாக உருவாகி வருகிறது 'யாவரும் நலம்'.

'டிராஃபிக் சிக்னல்', 'கரம் மசாலா' உள்ளிட்ட இந்திப் படங்களில் கலக்கிய நீத்து சந்திரா இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறார்.

இப்படத்தில் வரும் எல்லாரும் நல்லவர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால்...? இந்த ஆனாலுக்குப் பின் வரும் கேள்விக்கு பதில்தான் கதையின் பாதையும் பயணமும்... என்று புதிர் போடுகிறார் இயக்குனர் கே.குமார்.

ஆரம்பித்த நிமிடம் முதல் உச்சக்கட்ட காட்சி வரை தொடரும் விறுவிறுப்புக்கு தாம் உத்தரவாதம் தருவதாகவும் கூறி இருக்கிறார்.  இப்படத்துக்காக ரூ.60 லட்சம் செலவில் பிரம்மாண்ட செட் போட்டுள்ளனர்.

அதில்தான் முக்கால்வாசி படப்பிடிப்பு நடந்து வருகிறது.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code