| கமலுக்கு எஸ்பி டப்பிங் |
| Wednesday, 13 February 2008 | ||||
உலக நாயகன் கமல் 10 வேடங்களில் நடித்து இருக்கும் படம் தசாவதாரம். இப்படம் ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வருகிறது.50 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்திற்கு முன்னரே முடிந்து விட்டது. என்றாலும் போஸ்ட் புரொடக் ஷன் வேலைகள் இன்னும் நடந்து வருகின்றன. தமிழில் ஒரு படத்துக்கு இத்தனை நாட்கள் போஸ்ட் புரொடக் ஷன் வேலைகள் நடப்பது இதுவே முதல்முறை. ஏப்.10 அன்று தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் 'தசாவதாரம்' வெளியாகிறது. இதில் தமிழ், இந்தி இரு மொழிகளுக்கும் கமல்ஹாசனே டப்பிங் பேசியுள்ளார். தெலுங்கில் கமலுக்குப் பதில் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் டப்பிங் குரல் கொடுக்கிறார். தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்ட பல கமல் படங்களுக்கு ஏற்கனவே எஸ்.பி.பி. குரல் கொடுத்துள்ளார். அந்த வகையில் இப்படத்திற்கும் எஸ்பி டப்பிங் செய்திருக்கிறார். படம் விருதுகளை குவிக்கும் என எதிர்பார்ப்பதால் தமிழ் மற்றும் இந்தியில் நடித்துள்ள எல்லா நடிகர்களும் சொந்தக் குரலில் பேசியுள்ளனர்.
Write Comment |
||||
மற்றவை
- தசாவதாரம் திரைப்படம் ஜுன் 13 ல் ரிலீஸ்
- ஐபிஎல் அணி விளம்பரத்தில் நயன்
- அஜீத் மகள் பெயர் அனோஷ்கா
- யுவனுக்கு செல்வராகவன் கல்தா
- கவலையில் தங்கர்பச்சான்
- விஜய் விரும்பிய 'அஞ்சாதே'
- தெலுங்கிலும் 'ஜோதா அக்பர்'
- சின்னத்திரையில் பிஸியான சிம்ரன்
- விழிப்புணர்வு படத்தில் விவேக்
- சர்சைக்குப் பெயர்போன பத்மபிரியா
பகுதி:: கோலிவுட் செய்திகள்

உலக நாயகன் கமல் 10 வேடங்களில் நடித்து இருக்கும் படம் தசாவதாரம். இப்படம் ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வருகிறது.

