அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
முதியவர் வேடத்தில் கருப்பு
Friday, 15 February 2008
 காமெடியன்கள் ஹீரோவாகவும், குணச்சிததிர நடிகர்களாவும் மாறும் காலம் இது. கஞ்சா கருப்பு மட்டும் இதற்கு விதிவிலக்கா.
 
'அறை எண் 305 - ல் கடவுள்' படத்தில் இவரும் சந்தானமும்தான் கதைநாயகர்களாக நடித்துள்ளார்.

இப்படத்தில் நடித்துக் கொண்டே 'சுப்ரமணியபுரம்' என்ற படத்திலும் இருவேறு கெட்டப்புகளில் நடித்து பட யூனிட்டை அசத்தியுள்ளார்.

சசிகுமார் இயக்கும் 'சுப்ரமணியபுரம்' மதுரையில் எண்பதுகளில் நடந்த காதல் கதையை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நாயகன் ஜெய்யின் நண்பனாக வரும் கஞ்சா கருப்பு இதே படத்தில் வயதான கெட்டப்பிலும் நடித்துள்ளார்.(ஒருவேளை வடிவேலுக்கு போட்டியாகவோ என்னவோ)
 
கமல் மாதிரி கஞ்சா கருப்புவுக்கும் மும்பையிலிருந்து ஸ்பெஷல் மேக்கப்மேன் வரவழைத்து வயதானவராக மாற்றியிருக்கிறார்களாம்!

 


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code