| விஜய்யின் ரஜினி பட ரீமேக் ஆசை |
| Wednesday, 20 February 2008 | ||||
நடிகர் விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர் என்பது நம் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். தனது படத்திலும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இதனை நிரூபிக்க விஜய் தவறியதில்லை. சமீபத்தில் கோடம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பாத்திமா மெட்ரிகுலேஷன் பள்ளியின் ஆண்டு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது. இதில் நடிகர் விஜய் கலந்து கொண்டார். இந்த பள்ளியில்தான் விஜய் தனது ஆரம்ப கால படிப்பை முடித்தாராம். விழாவில் பேசிய விஜய்,' மாணவர்கள் குறிக்கோளுடன் செயல்பட வேண்டும்,' என வலியுறுத்தினார். குட்டீஸ்களை கவர தனது படத்தில் தொடர்ந்து காட்சிகளை வைப்பதாகவும், தனது பெற்றோர்கள் என்னை டாக்டராக்க விரும்பியதாகவும், ஆனால், தான் ஆக்டராகிவிட்டதாகவும் கூறினார். குட்டீஸ்களை மகிழ்விக்க ரஜினி நடித்த 'ராஜா சின்ன ரோஜா' படத்தை ரீமேக் செய்ய விருப்பம் இருப்பதாகவும் பேச்சோடு பேச்சாக விஜய் தெரிவித்தார்.
Write Comment |
||||
மற்றவை
- தசாவதாரம் திரைப்படம் ஜுன் 13 ல் ரிலீஸ்
- ஐபிஎல் அணி விளம்பரத்தில் நயன்
- அஜீத் மகள் பெயர் அனோஷ்கா
- யுவனுக்கு செல்வராகவன் கல்தா
- கவலையில் தங்கர்பச்சான்
- விஜய் விரும்பிய 'அஞ்சாதே'
- தெலுங்கிலும் 'ஜோதா அக்பர்'
- சின்னத்திரையில் பிஸியான சிம்ரன்
- விழிப்புணர்வு படத்தில் விவேக்
- சர்சைக்குப் பெயர்போன பத்மபிரியா
பகுதி:: கோலிவுட் செய்திகள்

நடிகர் விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர் என்பது நம் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். 

