அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
சேவல் படத்தில் சிம்ரன்
Saturday, 23 February 2008
 சம்பள விஷயத்தில் மிகவும் கராராக இருந்தார் நடிகை சிம்ரன். இவரைப் போலவே இருந்த காமெடி நடிகர் கவுண்டமணி, சுதாரித்துக் கொண்டு இனி இது வேளைக்காகாது என புரிந்து, 'தங்கம்' படத்தில் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு நடிக்க ஆரம்பித்து விட்டார்.

தங்கத்தைத் தொடர்ந்து, கவுண்டருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம்.

இதைப் பார்த்த சிம்ரன்,  தானும் சுதாரித்துக் கொண்டு சம்பளத்தை கணிசமாக குறைக்க தயாராகி விட்டார்.  பின்ன உடனே பட வாய்ப்புகள் சிம்ரனுக்கு குவிய ஆரம்பித்து விட்டதாம்.

பரத் நடிக்கும் சேவல் படத்தில் குறைவான சம்பளத்தில் சிம்ரன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இப்போது, தயாரிப்பாளர்கள் எல்லாம் சிம்ரனை புக் செய்வதற்காக அவரது வீட்டை நோக்கி படையெடுத்து வருகிறார்களாம்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code