அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
மணிரத்தனத்தின் படத்தில் விக்ரம்
Wednesday, 27 February 2008
 விக்ரமின் நீண்ட நாள் கனவு நிறைவேறப் போகிறது. சூட்டிங் ஸ்பாட்டிலும் சரி, தனது நெருங்கிய வட்டாரத்திலும் சரி அடிக்கடி ஆசைப்பட்டு சொல்வது இயக்குனர் மணிரத்தினம் படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான்.

அந்த கனவு இப்போது நிறைவேறப் போகிறது. இப்போதென்றால் இப்போதில்லை. இதற்காக ஒன்றரை ஆண்டுகள் விக்ரம் காத்திருக்க வேண்டும்.

ஆம்! இயக்குனர் மணிரத்தினம் அபிஷேக்-ஐஸ்வர்யா ராய் ஜோடியை வைத்து இந்திப் படம் ஒன்றை ஆரம்பிக்க இருக்கிறார்.

தற்போது, அந்தப் படத்தில் பிஸியாக இருக்கும் மணி, இப்படத்தை முடித்த பின் விக்ரமை வைத்து ஒரு புதிய படம் பண்ணப் போகிறாராம்.

தற்போது கந்தசாமியில் பிஸியாக இருக்கும் விக்ரம், இதை முடித்து விட்டு கேஎஸ் ரவிக்குமார் மற்றும் அமீர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதெல்லாம் முடித்த பிறகு மணிரத்தினம்-விக்ரம் கூட்டணி துவங்கும்.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code