அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
சூர்யா ஜோடியாக சிம்ரன்
Thursday, 28 February 2008

 ஒரு வழியாக நினைத்ததை சாதித்து விட்டார் நடிகை சிம்ரன்.  பெரிய நடிகர்களுடன் மட்டுமே நடிப்பேன் எனக் கூறி வந்த
சிம்ரன் அவர் விரும்பியபடியே நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக இணைய உள்ளார்.
 

அதிகப்படியான சம்பளம் மற்றும் சின்னத்திரையில் நடிப்பதால் 'குசேலன்' வாய்ப்பும் கைநழுவியது.

குஷ்பு தனது அவனி சினிகிரியேஷன்ஸ் சார்பில் தயாரி்க்கும் 'ஐந்தாம்படை' படத்திலும், ஹரி பரத்தை வைத்து இயக்கும்
'சேவல்' படத்திலும் சிம்ரனை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. ஆனால், சேவல் படத்தில் நடிக்க ஒப்புக்
கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தொலைக்காட்சி தொடரில் நடிப்பதற்காக சென்னை வந்த சிம்ரன், கவுதமின் 'வாரணம் ஆயிரம்' படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். படத்தில் சூர்யா ஜோடியாக அவர் நடிப்பார் என தெரிகிறது.

இப்படத்தில் சூர்யா வயதான கேரக்டர் ஒன்றிலும் நடிக்கிறார். அந்த வயதான கேரக்டருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்.
சிம்ரனின் முப்பதைந்து லட்சம் கோரிக்கை மட்டும் என்னவானது எனத் தெரியவில்லை.




Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code