அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
நீங்கள் கறுப்பு என்ற கவலையா?
Monday, 17 December 2007
 பொதுவாக பெண்கள் கறுப்பாக இருப்பதை விரும்புவதில்லை. இன்னும் சரியாகச் சொல்லப் போனால் ஆண்கள் கறுப்பாக இருந்தால் அதனை கலையாக இருக்கிறது என்று சொல்லும் நமது சமூகம் பெண்கள் கறுப்பாக இருப்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

கறுப்பாக இருக்கும் பெண்களிடம் ஒருவித தாழ்வு மன்ப்பான்மை அவர்களை அறியாமலேயே அவர்களிடம் ஒட்டிக் கொள்கிறது.

இவர்களுக்காகத் தானோ என்னவோ, 'கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு' என வைரமுத்து எழுதி வைத்தாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

சரி விஷயத்திற்கு வருவோம்!

கறுப்பாக இருக்கும் பெண்கள் சருமம் வெளுப்பாக இதோ சில டிப்ஸ்...


பப்பாளிப் பழத்தை நன்கு மசித்து, சில துளிகள் தேன் கலந்து முகம் முழுவதும் தடவி அரை மணி நேரம் ஊற விட்டு கழுவ வேண்டும்.

சருமத்தில் மாற்றம் வரும் வரை தொடர்ந்து இப்படிச் செய்து வரலாம்.

அரை முடி எலுமிச்சம்பழச் சாற்றில், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகம், கழுத்து, கைகளில் தடவி கால் மணி நேரம் ஊறிக் கழுவலாம்.

பாதாம் எண்ணையை உடல் முழுக்கத் தடவி, அரை மணி நேரம் ஊறி, கடலை மாவும், கஸ்தூரி மஞ்சளும் சேர்த்து அரைத்த பொடியால் தேய்த்து குளிக்கலாம்.

இந்த டிப்ஸ்களை தொடர்ச்சியாக செய்து வந்தால் உங்கள்  சருமத்தின் நிறத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.


Comments (1)
RSS comments
22-05-2008 08:39
hai
Written by swin (Guest)

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code