அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
மன அழுத்தத்தை தவிர்க்க...
Thursday, 03 January 2008
 எதிர்பார்ப்புகள் தரும் ஏமாற்றமே மனஅழுத்தத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக விளங்குகிறது.

கவனக் குறைவு, முடிவுகள் எடுப்பதில் சிக்கல், ஞாபக மறதி, குழப்பம், எதிர்மறை சிந்தனைகள், தெளிவற்ற சிந்தனைகள், தவறான முடிவுகள், தப்பித்தல் முயற்சிகள் போன்றனவும் மன அழுத்தத்தை அதிகப்படுத்துகின்றன.

தலைவலி, அஜீரணக் குறைபாடுகள், தூக்கமின்மை, தசைப்பிடிப்பு, உடல் வலி, நெஞ்சு வலி, சீரற்ற இதயத் துடிப்பு, உயர் இரத்த அழுத்தம், உடல் எடை அதிகரித்தல், குறைதல், ஆஸ்துமா, மூச்சுத் திணறல், தோல் நோய்கள், தாம்பத்தியக் குறைபாடுகள், புற்றுநோய், அல்சர், சர்க்கரை நோய்,  என மன அழுத்தம் தரும் உடல் நோய்களும் ஏராளம்.

இந்த மனம் உடல் சார்ந்த பாதிப்புகளினால் தன்னம்பிக்கைக் குறைபாடு, கோபம், எரிச்சல், சீரற்ற உணவு உண்தல், சீரற்ற தூக்கம், தனிமை விரும்புதல், கடமைகளைத் தவிர்த்தல், பதட்டம் உட்பட ஏராளமான செயல்களுக்கும் நம்மை அறியாமலேயே தள்ளப்பட்டு விடுகிறோம்.

எனவே, மன அழுத்தம் இல்லாமல் வாழ முயற்சிப்போம். வாய் விட்டுச் சிரியுங்கள், நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள் இவைகள் யாவும் மன அழுத்தத்திற்கு எதிரிகள்.

 மன அழுத்தத்தை தவிர்க்க மேலும் சில எளிய வழிமுறைகள் ;

* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள்.

* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

* காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள்.

* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப்படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

* புகை பிடித்தல், மது அருந்துவது ஆகியவற்றைத் தவிர்க்கலாம். காபி அதிகம் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதைச் செய்வேன்… என்பது போன்றவை.

* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

* ஒவ்வொருநாளும் சிறிது நேரம் எந்த தொந்தரவும் இல்லாமல் இளைப்பாறுங்கள். அவ்வேளையில் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்து விடுவது நிம்மதியைத் தரும்.

* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்ய முடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் ‘மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாது’ என்று வெளிப்படையாக சொல்லி விடப் பழகுங்கள்.

* உற்சாகமான நண்பர்களுடன் அதிக நேரம் பேசுங்கள், பழகுங்கள்

* நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்து தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும்.

* வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தம் தரும்.

* ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.

* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.

*குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன்ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

*  என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

* உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள். ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.

* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

* மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்கு வசப்படும்.

வாசகர்களே!

இந்தப் பகுதியில் உங்களது சிந்தனைகளையும், எண்ணங்களையும் எழுத்து வடிவில் பதிவு செய்ய முடியும். உங்களுக்குத் தெரிந்த அல்லது  அனுபவம் மூலம் நீங்கள் கற்றுக் கொண்ட தகவல்களை வஜ்ரம் வாசர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் தகவல்கள் சுவையானதாகவும், அதே வேளையில் பயனுள்ளதாகவும் இருக்கும்பட்சத்தில் உங்கள் பெயருடன் பிரசுரிக்கப்படும்.





Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code