| கருச்சிதைவை தவிர்க்க... |
| Wednesday, 27 February 2008 | ||||
பெண்கள் கர்ப்ப காலத்தில் போதிய கவனம் மற்றும் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் கருச்சிதைவு ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க டாக்டர்கள் என்ன சொல்கிறார்கள். இதோ : 'அபார்ஷன்' எனப்படுகிற கருச்சிதைவுக்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு. கருத்தரிக்கும் ஆற்றல் உள்ள உயிரணுக்கள் குறைந்திருந்து நீங்கள் கருத்தரித்திருந்தாலும், முதல் மூன்று மாதங்களில் அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்குதல், நீண்ட தூரப் பயணம் மேற்கொள்தல், அளவுக்கதிக டென்ஷன் போன்றவற்றாலும், காரமான உணவுகளை அதிகம் உண்பதால். கோழி, பப்பாளி, அன்னாசி, பலா போன்றவற்றை முதல் மூன்று மாதங்களில் உண்பதாலும் கருச்சிதைவு ஏற்படுகிறது. கருச்சிதைவு ஏற்படாமல் தடுக்க :உணவில் காரத்தையும், புளிப்பையும் குறைத்து செயற்கை மணம் மற்றும் நிறத்தைத் தவிர்த்து உண்ண வேண்டும். * இயற்கையான பழம், காய்கறிகள், ஜூஸ் சாப்பிடவும். * தினம் 3 முதல் 4 டம்ளர் பால் கட்டாயம் குடிக்கவும். * கர்ப்பத்தில் எந்தவிதத் தொந்தரவுகளும் இல்லை என்பதை உறுதி செய்யும் பட்சத்தில் அடிக்கடி ஸ்கேன் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். 14-வது வாரம் ஸ்கேன் செய்தால் போதும். இதனை மட்டுமே நீங்கள் முறையாக கடைபிடித்தாலே உங்களுக்கு முறையாக குழந்தை பிறக்கும், என்கின்றனர் டாக்டர்கள்.
Write Comment |
||||

பெண்கள் கர்ப்ப காலத்தில் போதிய கவனம் மற்றும் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் கருச்சிதைவு ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க டாக்டர்கள் என்ன சொல்கிறார்கள். இதோ : 

