| உதடுகள் அழகாக உன்னத டிப்ஸ்... |
| Wednesday, 28 November 2007 | ||||
என்னதான் நீங்கள் பேரழகியா இருந்தாலும் உதடுகளை ஒழுங்காக பராமரிக்காமல் விட்டு விட்டால் அது உலர்ந்து தோலுரிந்து போய் விடும் அங்கு உங்கள் அழகு எடுபடாது.பெண்களின் புற அழகுகளில் இதழ்களுக்கு முக்கியத்துவம் அதிகம். அதனால்தான். இதழ்களைப் பற்றி பாடாத கவிஞர்களை காண முடிவதில்லை. இனிப்பான செய்திகளையும் பூரண புன்னகையும் உதிர்க்கும் உதடுகளை ஒழுங்காகப் பராமரிப்பது எப்படி? என்கிறீர்களா? அதற்குத்தான் நாங்க இருக்கோமே. இதோ உங்களுக்கான டிப்ஸ்: கருத்த உதடுகள் சிவக்க... முட்டையின் வெள்ளைக்கருவுடன் தேன் கலந்து உதடுகளுக்கு தடவினால் உதடுகள் சிவப்பாக மாறும். இதனை ஒரு நாள் மட்டும் செய்தால் போதாதுங்க! தினமும் செய்து வந்தால் கூடிய விரைவில் நல்ல பலன் கிடைக்கும். கொத்தமல்லிச் சாற்றை தினமும் இரவு படுக்கச் செல்வதற்கு முன் உதடுகளில் தடவி வருவீர்களானால் லிப்ஸ்டிக் போடாமலே உதடுகள் சிவப்பாகும். பத்து கிராம் ரோஜா இதழ்களையும் பத்து கிராம் டீத்தூளையும் ஐம்பது மி.லி. தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். இதனை ஆற வைத்து உதடுகளுக்கு ஒத்தடம் கொடுத்து வாருங்கள். கருத்த உதடுகள் ஜெர்ரி பழ சிவப்பாகும். வழவழப்பான மிருதுவான உதடுகளுக்கு... உங்களின் உதடுகளின் மேல் தினந்தோறும் பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவி வந்தால் அவை மிருதுவாகவும் வழவழப்பாகவும் மாறும். வறன்ட உதடுகளுக்கு தினசரி நெய் அல்லது வெண்ணெய் தடவி வந்தால் கை மேல் இல்லை...இல்லை... வாய் மேல் பலன் கிடைக்கும். முட்டையின் வெள்ளைக் கரு பாதாம் பருப்பு விழுது பாலாடை ஆகியவற்றை கலந்து வாரத்திற்கு மூன்று முறை தடவி வந்தால் உதடுகள் கவர்ச்சியாகும். இந்த குறிப்புகளை ஒழுங்காக கடைபிடிச்சிட்டு வந்தீங்கன்னா உங்க உதட்டுச் சிவப்ப அந்த மருதாணியே கடன் கேட்டாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. இனி லிப்ஸ் ஸ்டிக் எதற்கு? இந்த லிப்ஸ் டிப்ஸே போதும் இல்லையா...?
Write Comment |
||||
மற்றவை
- கறையில்லாத பற்களுக்கு
- கண்ணில் கருவளையம் வருவதேன்?
- வியர்வை நாற்றம் நீங்க...
- பளபளப்பான முகத்திற்கு
- பித்த வெடிப்புக்கு என்ன செய்யலாம்?
- புருவங்களில் ரோமங்கள் வளர...
- கழுத்தை அழகாக வைத்திருப்பது
- வறண்ட சருமம் அழகாக...
- எண்ணைய் வடியும் முகமா உங்களுக்கு?
- நீங்கள் கறுப்பு என்ற கவலையா?
பகுதி:: நீங்களும் அழகிதான்

என்னதான் நீங்கள் பேரழகியா இருந்தாலும் உதடுகளை ஒழுங்காக பராமரிக்காமல் விட்டு விட்டால் அது உலர்ந்து தோலுரிந்து போய் விடும் அங்கு உங்கள் அழகு எடுபடாது.

