அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
சோப் போடுவதால் நன்மையா...?
Wednesday, 28 November 2007
 நம் அழகை பராமரிக்கும் அன்றாடத் தேவைகளில் அதி முக்கியமானது சோப் என்று சொல்லப்படுவது உண்மைதானா...?

இதற்கு அழகுக் கலை நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்...?

சருமத்தின் அழுக்கையும்  பிசுபிசுப்பையும்  நீக்குவதைத் தவிர  சோப் வேறு எதற்கும் பயன்படுவதில்லை என்பது அழகுக் கலை

நிபுணர்களின் அசைக்க முடியாத கருத்தாக இருக்கிறது.

உடலில் நறுமணத்தை ஏற்படுத்துகிறது.

யார்...யார் எப்படிப்பட்ட சோப் பயன்படுத்தலாம்?

முதலில் உங்களின் சருமத்தின் தன்மையை தெரிந்து கொண்டு அதற்கேற்ற பொருத்தமான சோப்பை பயன்படுத்த வேண்டும்.

எண்ணைய் பசை உள்ள சருமம் மற்றும் பருக்கள் உள்ள சருமத்திற்கு கிளிசரின் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்த சோப்பை பயன்படுத்தலாம்.

குளிர் காலத்தில் மாயிச்சரைச்சர் அதிகமுள்ள சோப்பையும்  வெயில் நாட்களில் எலுமிச்சை கலந்த சோப்பையும் பயன்படுத்தலாம்.

அதிக வாசனை உள்ள சோப்புக்கள் தரமானவை என்று அர்த்தமல்ல. ரசாயனப் பொருட்களின் நிறத்தை மறைக்க  கொழுப்பின் வாசனையை தவிர்க்கவே அதிக மணமும்  நிறமும் சேர்க்கப்படுகிறது.

எனவே  மிதமான வாசனை உள்ள சோப்பே சருமத்துக்கு நல்லது.

சோப் உபயோகிக்கும் போது...

அடிக்கடி சோப்பை மாற்றதீர்கள்   அப்படி மாற்றுவதால் புதிய சோப்புகள் அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

தினமும் இரண்டு முறை சோப் போட்டு முகம் கழுவினால் போதும்.

அடிக்கடி சோப் பயன்படுத்தினால் சருமம் வறண்டு போகச் செய்யும்.

சோப் ஒத்துக் கொள்ளாதவர்களுக்கு ...

எந்த சோப்புமே ஒத்துக் கொள்ளாதவர்கள் கடலை மாவு அல்லது  பயத்தம் மாவுடன் பாலாடை மஞ்சள்  சந்தனம் கலந்து உபயோகிக்கலாம்.

மூலிகைகள் அடங்கிய குளியல் பொடிகளையும் பயன்படுத்தலாம்.

என்ன! சோப்புகளில் இவ்வளவு விகயம் இருக்கிறதே என மிரண்டு விட்டீர்களா... சரி...சரி.. இனியாவது நமது இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code