அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
எப்படிச் சாப்பிட வேண்டும்?
Monday, 17 March 2008
 'சாப்பிடத்தான் நீ லாயக்கு, உனக்கு சாப்பிட மட்டும்தான் தெரியும்' என கேலியாகவும், கோபமாகவும் நாம் கூறுவது உண்டு. ஆனால், ஆராய்ந்து பார்த்தால் எத்தனை பேருக்கு முறையாக சாப்பிடத் தெரியும் என்பது தெரிந்து விடும். அட முறையா சாப்பிடுவது கூட ஒரு கலைதாங்க!

எப்படிச் சாப்பிடுவது என்ற கலையைக் காண்போம்.

* பசிக்கும்போது மட்டுமே உண்ணவேண்டும். 'பசிக்குப் புசி' நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றது இதனால்தான்.

* உணவை சற்று சூடாக சாப்பிட்டால் எளிதில் செரிமாணம் ஆகும்.

* உணவை அப்படியே விழுங்காமல், நன்றாக மென்று உண்ணவேண்டும். இதன் மூலம் பற்களுக்கு வலு கூடுகிறது. எளிதில் உணவு ஜீரணம் ஆவதால், ஜீரண உறுப்புகளுக்கும் வேலை குறைகிறது.

* சாப்பிடும்போது, அதிக சூடாகவோ அல்லது அதிக குளிர்ச்சியாகவோ குடிநீர் அருந்தக்கூடாது. மற்ற நேரங்களிலும் இதை பின்பற்றுவது உடலுக்கு நல்லது.

* சில் நேரங்களில் சாப்பாட்டுக்கு முன்னதாக இனிப்பு வைத்து விடுவார்கள்.  அப்படி வைக்கப்படும் இனிப்புகளை லேசாக சுவை பார்த்து விட்டு சாப்பாட்டில் கவனம் செலுத்த் வேண்டும். இனிப்பையே விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தால் பசி அடங்கி விடும்.

* மூக்கு முட்ட சாப்பிடக்கூடாது. அளவாக அல்லது ஒரு பிடி குறைவாக உண்ணலாம். சாப்பிட்டவுடன் சிறிது ஓய்வு தேவை. மதிய உணவு முடிந்ததும் உடனடியாக பணியில் ஈடுபடக்கூடாது.

* 'பாலன்ஸ்டு டயட்' என்று சொல்லப்படும் அனைத்து வித சத்துக்களையும் கொண்ட, சமச்சீரான உணவுகளை சாப்பிட வேண்டும்.

* இரவு உணவு முடிந்தவுடன் உடனே தூங்கச் சென்று விடக் கூடாது. சிறிது தூரம் மெதுவாக நடக்கலாம். இது செரிமாணத்திற்கு உதவிகரமாக இருக்கும்.


Comments (1)
RSS comments
23-05-2008 07:23
நன்று
Written by ஜனா (Guest)

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code