|
பற்கள் பளிச்சிட... என்ன செய்யலாம்?
|
|
Thursday, 13 December 2007 |
பல் போனால் சொல் போச்சு என்பார்கள். ஆம்! அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பற்களை பராமரிப்பதில ் நம்மில் பெரும்பாலும் அக்கறை காட்டுவதே இல்லை. பற்களை சுத்தமாகவும், அதில் கரை ஏற்படாமலும் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
பற்களில் கறை ஏற்பட்டு விட்டதா...? அதனை நீக்க என்னதான வழி என யோசித்துக் கொண்டிருப்பவரா நீங்கள்? கவலை வேண்டாம்.
பற்களில் உள்ள கறைகளைப் போக்க 'ஸ்கேலிங்'என்ற புதிய முறை ஒன்று உள்ளது. இதனை பயன்படுத்தி மருத்துவர்கள் பற்களில் உள்ள கறைகளை சுரண்டி எடுத்து விடுகின்றனர்.
இதற்குப் பிறகு மீண்டும் பற்களில் கறை படியாமலிருக்க கீழ்கண்ட வழிமுறைகளை நீங்கள் கடை பிடிக்க வேண்டும்.
- தினமும் பற்களை வெகு சுத்தமாக துலக்கி பராமரிக்க வேண்டும். முடிந்தால் காலை, மாலை என இருவேளைகளிலும் துலக்குதல் நலம்.
- புகையிலை, வெற்றிலை போன்ற கறை உண்டாக்கும் பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
- புகைபிடித்தல், காபி, டீ, சாப்பிடக் கூடாது
- கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்த உணவுப்பொருட்களை அதிகம் சாப்பிட்டு வர வேண்டும்.
இவற்றை தொடர்ச்சியாக கடை பிடித்து வந்தால், சினிமா ஸ்டார் போல உங்கள் பற்களும் பளீரென பளிச்சிடும் என்பதில் சந்தேகமில்லை.
|