|
'வைட்டமின் ஏ' நிறைந்த கறிவேப்பில்லை
|
|
Wednesday, 02 January 2008 |
|
மாறிவரும் இயந்திர யுகத்துக்கு ஏற்ப நோய்களும் புதிது புதிதாக வர ஆரம்பித்து விட்டன.
இப்பொதெல்லாம், இளம் வயதிலேயே, பார்வைக் கோளாறு, மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவது மக்களை பீதியடையச் செய்கிறது.
நோய்களின் தாக்கத்தில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள உடற்பயிற்சி மிக முக்கியம். அதோடு சரிவிகித உணவு அவசியம்.
அதிலும் இயற்கையில் கிடைக்கும் உணவுப் பொருட்களில் எத்தனையோ சத்துக்கள் பொதிந்து கிடக்கின்றன.
நமது உணவுப் பொருட்களுடன் அன்றாடம் சேர்க்கப்படும் கறிவேப்பில்லையை சாப்பிடாமல் ஒதுக்கி விட வேண்டாம்.
அதில், வைட்டமின் ஏ 75000 மைக்ரோ கிராம், கால்சியம், போலிக் அமிலம், மற்றும் வைட்டமின் பி, சி ஆகிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
'வைட்டமின் ஏ' சத்து குறைவினாலே, பார்வை சம்பந்தமான கோளாறுகள் ஏற்படுகின்றன.
முருங்கைக் கீரை போல, கறிவேப்பில்லையிலும் 'ஏ' சத்து அதிகமிருப்பதால் இனி இதை தவிர்க்க வேண்டாமே!. மேலும், மற்ற உணவு வகைகளைப் போல கறிவேப்பில்லையை நாம் தேடி அலைய வேண்டாம். நமது அன்றாட உணவு வகையிலேயே கலந்து கிடக்கிறது.
வாசகர்களே!
இந்தப் பகுதியில் நீங்களும் உங்களுக்குத் தெரிந்த, அல்லது நீங்கள் படித்த பயனுள்ள மருத்துவ குறிப்புகளை 'இது உங்க ஏரியா' மூலம் அனுப்பி வைக்கலாம். அவை உங்களது பெயருடன் இந்த தளத்தில் பிரசுரிக்கப்படும்.
|