|
Thursday, 07 February 2008 |
இவன் சரியான டென்ஷன் பேர்வழி என்று சிலர் சொல்லக் கேட்டிருப்போம். சிலர் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள். காரணமே இல்லாமல் எரிந்து விழுவார்கள். அப்படிப் பட்ட டென்ஷன் பார்ட்டிகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.
டென்ஷன் என்பது, ஏதோ ஒரு சூழ்நிலையில் கோபத்தில் எழுந்து அடங்கும் உணர்வு என்றுதான் பலரும் நினைக்கிறார்கள்! அது தவறு. மனத்தாலும், உடலாலும் அது பல கட்டங்களைக் கடந்த பின்னர்தான் வெளிப்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற முனைப்பு உள்ளுக்குள் எழுகிறது. அதற்கு இடையூறு ஏற்படுவதாக உணர்கிறீர்கள். உடனே, அதைச் சரியாக செய்ய முடியுமோ முடியாதோ என்கிற சந்தேகம் உள்ளுக்குள் வந்துவிடுகிறது. மனம் பதைபதைப்பு அடைகிறது. நெஞ்சு துடிக்கிறது. ஒரு தடுமாற்றம் நடுக்கம் வருகிறது. நிதானம் இழக்கிறது. தவிப்பு ஏற்படுகிறது. இதனால், உடல் திசுக்கள் நிறைய கெடுகின்றன.
உடல்திசுக்கள் கெடக்கெட மனத்திலும், உடலிலும் ஒரு விறைப்பு நிலை உண்டாகிவிடும். இந்தச் சமயம்தான் மனிதர் கண்மண் தெரியாமல் நடந்து கொள்கிறார். அதாவது டென்ஷன் அடைகிறார்.
யார் யார் எளிதில் டென்ஷன் ஆகிறார்கள்!
டென்ஷன் ஆகிறவர்களுக்கு அடிக்கடி தலைவலி வரும். தலைக்கனமாக இருக்கும். கழுத்துவலி, உடல்வலி இருப்பதாக அடிக்கடி சொல்பவர்கள், திடீர்திடீரென்று இதயத்துடிப்பு அதிகரிப்பதாக உணர்பவர்கள்.
எடை குறைபவர்கள், உடல் பலவீனமாகவே இருப்பவர்கள், ஞாபகமறதி உள்ளவர்கள், மனதை ஒருமுகப்படுத்த முடியாமல் தவிப்பவர்கள், மனச் சஞ்சலம் உள்ளவர்கள், கைகால்களில் நடுக்கம் உள்ளவர்கள், உள்ளங்கை மற்றும் கால் பாதங்களில் வியர்வை கொண்டவர்கள்.
தன்னம்பிக்கை குறைந்தவர்கள், எதிலும் ஆர்வமில்லாதவர்கள், எப்போதும் சோகமாகக் காட்சித் தருபவர்கள், பசியின்மை தூக்கமின்மை உள்ளவர்கள், எதன்மீதும் ஒரு முடிவு எடுக்க முடியாமல் இருப்பவர்கள் ஆகியோருக்கு டென்ஷன் எளிதில் வரும்.
டென்ஷனைக் குறைக்க வழிகள் :
ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு இடையே தண்ணீர் குடியுங்கள் இது டென்ஷனைக் குறைக்க உதவும்.
தியானம் செய்யும், இது டென்ஷனைக் குறைப்பதோடு மட்டுமில்லாது, மனதை ஒருமுகப்படுத்தும்.
முடிந்தவரை பதைபதைப்புக்கு உள்ளாகாமல், நிதானமாகச் செயல்படுவது நல்லது.
|