அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
கழுத்து வலியா...
Monday, 17 March 2008
 1. மேஜையில் அமர்ந்து பணி ஆற்றும்போது நெடுநேரம் தலை கவிழ்ந்த நிலையைத் தவிர்க்கவும்.

2. ஒரே நிலையில் நெடுநேரம் கழுத்தை வைத்திருக்காமல் அடிக்கடி தலையை அசைக்கவும். இது தசைகள் இறுக்கம் அடைவதைத் தவிர்க்கும்.

3. படுக்கும்போது கழுத்துக்குக் கீழே ஒன்றுக்கு மேற்பட்ட தலையணைகள் அல்லது அதிக உயரமான தலையணை வைப்பதை தவிர்க்கவும்.

4. வயிறு தரையில் படும்படி குப்புறப்படுக்காதீர்கள். இந்த நிலை கழுத்தை முறுக்கி விடும்.

5. ஒரு குறிப்பிட்ட உயரத்தைப் பார்ப்பதில் தொடர்ச்சியாக, நெடுநேரம் ஈடுபடாதீர்கள். அதே போல் அதிக கனம் தூக்குவதில் அதிக நேரம் ஈடுபடாமல் இருக்கவும்.

6. நெடுநேரம் தொடரும் `டிரைவிங்'கைத் தவிர்க்கவும். அடிக்கடி ஓய்வுக்காக வண்டியை நிறுத்தவும்.

7. கடுமையான வலி ஏற்படும் சமயத்தில் படுக்கையில் படுத்து ஓய்வு எடுக்கவும். பாதிக்கப்பட்ட பகுதிக்கு வெந்நீர் (அல்லது) ஐஸ் ஒத்தடம் தரவும்.

8. மனதளவில் இறுக்கமின்றி "ரிலாக்ஸாக" இருக்கவும்.

9. நேரான கோணத்தில் அமரவும். (குறிப்பாக அலுவலகத்தில் மேஜைப்பணி புரியும் போது, கம்ப்யூட்டர் முன் அமரும் போது...)

10. படிக்கும்போது, படிக்கிற பக்கத்தை உங்கள் நேர் எதிரில் வைத்துக் கொள்ளவும்.

மேற்கூறியவற்றை சரியாக கடைபிடித்து வந்தாலே கழுத்து வலி காணாமல் போய்விடும்.



Comments (1)
RSS comments
24-05-2008 09:42
Ayya Vannakkam.ningal sonnapadi seiduparthen.Nalla suham kidaidhathu.Nannri.
Written by A.Antonyraj (Guest)

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code