|
Wednesday, 30 January 2008 |
|
அற வழியில் போராடி நாட்டின் விடுதலையைப் பெற்றுத்தந்த அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் 61வது நினைவு தினம் இன்று(ஜனவரி 30) நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்நாள், ஆண்டுதோறும் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, காலை 9 மணியளவில், மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு, தமிழக கவர்னர் பர்னாலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து, நாட்டிலுள்ள் தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், அலுவலங்கள் என எல்லா இடங்களிலும் அனைத்து அலுவல்களும் நிறுத்தப்பட்டு காலை 11 மணிக்கு இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் மவுன அஞ்சலிக்குப் பிறகு 11.03க்கு 'தீண்டாமை ஒழிப்பு' உறுதிமொழியை முதல்வர் கருணாநிதி வாசிக்க சட்டசபை உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் என அனைவரும் உறுதி எடுத்துக் கொண்டனர்.
அஸ்தி கரைப்பு
மகாத்மாவின் கடைசி அஸ்தி இன்று அரபிக் கடலில் கரைக்கப்பட்டது. 1948ம் ஆண்டு அண்ணல் காந்து சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் ஆறு, கடல் என அவரது அஸ்தி நாடு முழுவதும் கரைக்கப்பட்டது. அந்த அஸ்தியின் மீதத்தை, மணி பவனில்(மும்பை வரும்போதெல்லாம் மகாத்மா தங்கும் இடம்) இதுநாள் வரை பத்திரப்படுத்தப்பட்டது.
அந்த அஸ்தியின் ஒரு கடந்த 1997ம் ஆண்டு, புவனேஸ்வரில் கரைக்கப்பட்டது. அதன் மீதத்தை தெற்கு மும்பையில் இன்று கரைத்தனர். மகாத்மாவின் அஸ்தி முழு ராணுவ மரியாதையுடன் எடுத்து வரப்பட்டது. பின்னர் அது கடலில் கரைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல், மாநில கவர்னர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் மாநில துணை முதல்வர் ஆர்ஆர் பாட்டீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
|