| புயலின் கோர தாண்டவம்: 5000 பேர் சாவு |
| Wednesday, 07 May 2008 | ||||
மியான்மரில் பெரும் பகுதியை நர்கீஸ் புயல் நாசமாக்கியுள்ளது.அங்குள்ள இராவட்டி டெல்டா பகுதி தலைநகரம் யாங்கூன் ஆகியவை மோசமாக பாதிக்கப்பட்டஇடமாகும். அதில் இராவட்டி பகுதி முற்றிலும் நாசமாகி விட்டது. இதில் அங்கு 22 ஆயிரத்து 500 பேர் பலியாகி உள்ளதாகவும் 41 ஆயிரம் பேரை காணவில்லை என்றும் காணாமல்போனவர்களில் பெரும்பகுதியினர் இறந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. எனவே சாவு எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டும் என தெரிகிறது. ஐ.நா. வேண்டுகோள்: புயலால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு உதவுமாறு உலக நாடுகளுக்கு ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது. பிளாஸ்டிக் ஷீட்கள் தண்ணீரை சுத்தமாக்கும் மருந்துகள் சமையல் கருவிகள் கொசு வலைகள் சுகாதார கருவிகள் உணவு ஆகியவை உடனடியாக தேவைப்படுவதாக யாங்கூனில் உள்ள ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது. அங்கு ராணுவஆட்சி நடைபெறுவதால் அந்நாட்டின் மீது அமெரிக்கா பல தடைகளை விதித்து உள்ளது. இந்நிலையில் மியான்மருக்கு உதவ தனது கட்டுப்பர்டடை தளர்த்த தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறி உள்ளது. மேலும் உடனடியாக உதவியாக அந்நாட்டுக்கு ரூ. 1 கோடி வழங்கி இருக்கிறது. மியான்மருக்கு இந்தியா உதவ வேண்டும் என்று அமெரிக்க அதிபர் புஷ்சின் மனைவி லாரா புஷ் இதை அறிவித்துள்ளார். இதனால் இந்தியா உதவி செய்தால் அதை மியான்மர் உடனடியாக ஏற்றுக் கொள்ளும் என்று நினைக்கிறேன் என்றும் இந்தியாவுக்கு மிக அருகில் மியான்மர் உள்ளதால் அவர்கள் உடனடியாக உதவ நிறைய வழிகள் உள்ளதாகவும் அவர் கூறினார். முன்னதாகவே மியான்மருக்கு 2 போர்க் கப்பல்களில் உணவு மற்றும் மருந்து பொருட்களை இந்தியா அனுப்பி வைத்து இருக்கிறது.
Write Comment |
||||
மற்றவை
- காங்கிரஸ் வெற்றி: ஸ்ரீலங்கா மகிழ்ச்சி!
- சார்க் மாநாட்டின்போது போர் நிறுத்தம்
- நேபாளத்தில் முதல் ஜனாதிபதி தேர்தல்
- அணுசக்தி ஒப்பந்தம்: சீனா எதிர்க்காது!
- 10 டாலர் சரிந்தது கச்சா எண்ணெய்!!
- கருணா அழைக்கப்பட்டதன் பின்னணி என்ன?
- ஒபாமா செல்வாக்கு திடீர் சரிவு
- மகிந்த ராஜபக்சே இன்று இந்தியா வருகை
- புஷ்-மன்மோகன் 50 நிமிட பேச்சு
- சீன அதிபருடன் மன்மோகன் சந்திப்பு
பகுதி:: சர்வதேசம்

மியான்மரில் பெரும் பகுதியை நர்கீஸ் புயல் நாசமாக்கியுள்ளது.


