அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
பிரபாகரனை பிடிக்க இலங்கை தீவிரம்
Friday, 13 June 2008

 சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் நேரடிக் கண்காணிப்பிலேயே மணலாறு படை நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒளிந்துள்ள எல்லைப் பிரதேசத்தை படையினர் சுற்றிவளைத்துள்ளனர். நான்கு பக்கங்களாலும் முன்னேறிக்கொண்டிருக்கும் படையினர் முல்லைத்தீவை சுற்றிவளைத்திருப்பதால் புலிகளின் தலைவர் பிரபாகரன் தப்பியோடுவதற்கு வழியின்றி பதுங்கு குழிக்குள் ஒளிந்திருக்கிறார். அவரை உயிருடன் பிடிப்பதற்கான நடவடிக்கைகளை படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

56, 57, 58 மற்றும் 59 ஆவது படையணிகளே நான்கு பக்கங்களாக முன்னேறி முல்லைத்தீவிற்குள் நுழைந்துள்ளன.

இப்படையணிகளின் சுற்றிவளைப்புக்கு உதவும் வகையில் 61 ஆவது படையணியும் அதிரடிப்படை - II படையணியும் என இரண்டு படையணிகள் மேலதிகமாகச் செயற்படுகின்றன.

எனது நேரடிக் கண்காணிப்பில் நடைபெறும் இப்படை நடவடிக்கையில் புலிகளின் வன்போர் என்ற தளத்தை படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்தியப் படை இலங்கைக்கு வந்தபோது பிரபாகரன் ஒளிந்து கொள்வதற்காகவே இம் முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

இம் முகாம் சிறு சிறு காவலரண்கள் பலவற்றைக் கொண்டுள்ளது.

விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 800 கிலோமீற்றர் பரப்பளவான பகுதியை படையினர் இப்போது பலப்படுத்தியுள்ளனர்.




Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code