| புலிகள் தாக்குதலில் 12 போலீசார் பலி |
| Tuesday, 17 June 2008 | ||||
இலங்கையில் வவுனியா போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று விடுதலைப்புலகிள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 3 பெண் போலீஸ் உட்பட 12 போலீசார் பலியாகினர். மேலும் 22 பேர் காயமடைந்தனர்.சூப்பிரண்டு அலுவலகம் இலங்கையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இனப் பிரச்சனையில் உச்சகட்ட போர் வெடித்துள்ளது. கடல் வான் தரை என்று மூன்று வழிகளிலும் ராணுவம் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுமையான சண்டை நடைபெறுகிறது. இலங்கைக்கு வடக்கு பகுதியில் வவுனியாவில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அமைந்துள்ளது. நேற்று காலை 7.10 மணி பல்வேறு இடங்களுக்கு பணிகளுக்கு செல்வதற்காக ஏராளமான போலீசார் குவிந்திருந்தனர். அப்போது அந்த அலுவலகத்துக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் விடுதலைப்புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவர் வந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை அவர் வெடிக்கச் செய்தார். உடனே பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது. குண்டு வெடித்தபோது அந்த அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு இல்லை. இதில் மூன்று பெண் போலீசார் உட்பட 12 போலீசார் பலியாகினர். 19 போலீசார் படுகாயம் அடைந்தனர்.
Write Comment |
||||
மற்றவை
- காங்கிரஸ் வெற்றி: ஸ்ரீலங்கா மகிழ்ச்சி!
- சார்க் மாநாட்டின்போது போர் நிறுத்தம்
- நேபாளத்தில் முதல் ஜனாதிபதி தேர்தல்
- அணுசக்தி ஒப்பந்தம்: சீனா எதிர்க்காது!
- 10 டாலர் சரிந்தது கச்சா எண்ணெய்!!
- கருணா அழைக்கப்பட்டதன் பின்னணி என்ன?
- ஒபாமா செல்வாக்கு திடீர் சரிவு
- மகிந்த ராஜபக்சே இன்று இந்தியா வருகை
- புஷ்-மன்மோகன் 50 நிமிட பேச்சு
- சீன அதிபருடன் மன்மோகன் சந்திப்பு
பகுதி:: சர்வதேசம்

இலங்கையில் வவுனியா போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று விடுதலைப்புலகிள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 3 பெண் போலீஸ் உட்பட 12 போலீசார் பலியாகினர். மேலும் 22 பேர் காயமடைந்தனர்.


