அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
கருணா சிறிலங்காவுக்கு நாடு கடத்தல்
Saturday, 05 July 2008
 கடத்தல், கப்பம், சித்திரவதை, சிறுவர்களை படைக்கு ஆட்சேர்த்தல் உட்பட பல சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கருணாவை நீதியான விசாரணையின் முன் நிறுத்துமாறு கடந்த மே 14 ஆம் நாளும், ஜூன் 4 ஆம் நாளும் அனைத்துலக மன்னிப்புச்சபை லண்டன் காவல்துறையினருக்கு இரு கடிதங்களை எழுதியிருந்தது.

தமது இந்த கடிதங்கள் தொடர்பில் எந்தப்பதிலும் அளிக்காமல் குற்றம் சாட்டப்பட்ட கருணாவை சிறிலங்காவுக்கு நாடு கடத்தியமை, அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்றே கருதவேண்டியுள்ளது என்றும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

இது  தொடர்பில் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கருணாவுக்கு எதிரான குற்றச்சாட்களுக்கு ஆதாரமாக அவரால் பாதிக்கப்ட்ட பலர் சாட்சியமளித்துள்ளனர். இன்னமும் சாட்சியமளிக்க தயாராகவும் உள்ளனர்.

அத்துடன், சிறிலங்காவில் சாட்சிகளுக்குப் பாதுகாப்பில்லாத இந்த வேளையிலும், அங்கிருந்து ஒரு சாட்சி கருணாவுக்கு எதிராக தனது வாக்குமூலத்தை பதிவு செய்திருந்தார்.

தற்போது எந்த விசாரணைகளுமின்றி விடுவிக்கப்பட்ட கருணா மீண்டும் சிறிலங்கா சென்றிருப்பதால், அங்கு கருணாவுக்கு எதிராக வாக்குமூலமளித்த சாட்சியின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது.

தற்போது சிறிலங்கா சென்றுள்ள கருணாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள  குற்றங்கள் தொடர்பில் சிறிலங்காவில் விசாரணைகளை மேற்கொள்ளும்படி அந்நாட்டுக்கு கடிதம் எழுதவுள்ளோம்.

இதேவேளை, முன்னாள் யூகோஸ்லாவியா, ருவாண்டா, சியாரலியோன் ஆகிய நாடுகளை முன்மாதிரியாகக்கொண்டு சாட்சிகளை பாதுகாக்கும் திட்ட அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

அத்துடன், போர்க்குற்றங்கள் மற்றும் குற்றச்செயல்களை விசாரிப்பதற்கு பிரித்தானியா சுதந்திரமான விசாரணைக்குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் விதத்தில் அமைக்கப்படும் இந்த அமைப்புக்களின் செயற்பாடுகள் செம்மையாக நடைபெறுவதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code