| ஒபாமா செல்வாக்கு திடீர் சரிவு |
| Monday, 14 July 2008 | ||||
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஒபாமாவின் செல்வாக்கு திடீரென சரிந்துள்ளது.அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பரில் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக மைக்கேனும் ஜனநாயக கட்சி வேட்பாளராக பராக் ஒபாமாவும் போட்டியிடுகிறார்கள். இருவரும் ஆதரவாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் நியூஸ் வீக் பத்திரிகை தனது கருத்துக்கணிப்பில் மைக்கேனை விட ஒபாமாவுக்கு 15 சதவீதம் அதிக ஆதரவு இருப்பதாக தெரிவித்தது. ஆனால் தற்போது அதே பத்திரிக்கை மைக்கேனுக்கு 41 சதவீத ஆதரவும் ஒபாமாவுக்கு 44 சதவீத ஆதரவும் உள்ளது. ஒபாமாவின் ஆதரவில் ஏற்பட்டுள்ள சரிவு வியப்பளிப்பதாக நியூஸ் வீக் கூறுகிறது. ஜனநாயக கட்சி வேட்பாளராக தேர்வு பெறுவதற்கு ஒபாமாவுடன் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் கடுமையாக மோதினார். சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் ஒபாமா தேர்வு பெற்றார். ஹிலாரி கிளிண்டனின் ஆதரவாளர்கள் ஒபாமாவை முழுமையாக ஏற்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. ஒபாமாவின் செல்வாக்கு சரிவுக்கு இதுவும் ஒரு காரணம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
Write Comment |
||||
மற்றவை
- காங்கிரஸ் வெற்றி: ஸ்ரீலங்கா மகிழ்ச்சி!
- சார்க் மாநாட்டின்போது போர் நிறுத்தம்
- நேபாளத்தில் முதல் ஜனாதிபதி தேர்தல்
- அணுசக்தி ஒப்பந்தம்: சீனா எதிர்க்காது!
- 10 டாலர் சரிந்தது கச்சா எண்ணெய்!!
- கருணா அழைக்கப்பட்டதன் பின்னணி என்ன?
- ஒபாமா செல்வாக்கு திடீர் சரிவு
- மகிந்த ராஜபக்சே இன்று இந்தியா வருகை
- புஷ்-மன்மோகன் 50 நிமிட பேச்சு
- சீன அதிபருடன் மன்மோகன் சந்திப்பு
பகுதி:: சர்வதேசம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஒபாமாவின் செல்வாக்கு திடீரென சரிந்துள்ளது.


