| நேபாளத்தில் முதல் ஜனாதிபதி தேர்தல் |
| Monday, 21 July 2008 | ||||
நேபாள நாட்டின் முதல் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியை தேர்வு செய்தவற்கான தேர்தல் இன்று நடந்தது.நேபாளத்தில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து முதல் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியை தேர்வுசெய்ய இன்று தேர்தல் நடந்தது. காத்மாண்டுவில் உள்ள சர்வதேச மாநாட்டு அரங்கில் காலை 11 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி பிற்பகல் 2 மணிக்கு முடிவடைந்தது. மாலை 5 மணியளவில் நேபாள நாடாளுமன்றத்தில், தேர்தல் முடிவு அறிவிக்கப்படும். ராம்ராஜ் பிரசாத் சிங், டாக்டர் ராம் பரன் யாதவ் மற்றும் ராம் ப்ரிட் பஸ்வாட் ஆகியோர் ஜனாதிபதி பதவி போட்டியில் உள்ளனர். துணை ஜனாதிபதி பதவிக்கு சாந்த ஷ்ரேஸ்தா, நான் பஹதூர் பிஷ்வகர்மா, அஷ்டலஷ்மி ஷாக்யா மற்றும் பர்மானந்தா ஜா ஆகியோர் போட்டியிட்டனர்.
Write Comment |
||||
மற்றவை
- காங்கிரஸ் வெற்றி: ஸ்ரீலங்கா மகிழ்ச்சி!
- சார்க் மாநாட்டின்போது போர் நிறுத்தம்
- நேபாளத்தில் முதல் ஜனாதிபதி தேர்தல்
- அணுசக்தி ஒப்பந்தம்: சீனா எதிர்க்காது!
- 10 டாலர் சரிந்தது கச்சா எண்ணெய்!!
- கருணா அழைக்கப்பட்டதன் பின்னணி என்ன?
- ஒபாமா செல்வாக்கு திடீர் சரிவு
- மகிந்த ராஜபக்சே இன்று இந்தியா வருகை
- புஷ்-மன்மோகன் 50 நிமிட பேச்சு
- சீன அதிபருடன் மன்மோகன் சந்திப்பு
பகுதி:: சர்வதேசம்

நேபாள நாட்டின் முதல் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியை தேர்வு செய்தவற்கான தேர்தல் இன்று நடந்தது.


