| சர்சைக்குப் பெயர்போன பத்மபிரியா |
| Tuesday, 04 March 2008 | ||||
வாத்தியார் படத்தை இயக்கிய ஏ.வெங்கடேஷ் மீண்டும் அர்ஜூனை வைத்து 'துரை' என்ற படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க பத்மபிரியா ஒப்பந்தமானார்.இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி, ஏவி.எம் ஸ்டியோவில் நீராவி இயந்திர அரங்குகள் அமைக்கப்பட்டு சண்டைக்காட்சிகள் படமாகி வருகிறது. ஓட்டல் சர்வர் கதாபாத்திரத்தில் அர்ஜூன் நடிக்கும் பகுதிகள் மட்டும் தற்போது படமாகி வருகிறது. அர்ஜூன் - பத்மப்ரியா பங்குபெறும் காட்சிகள் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் படமாகவுள்ளது. இதற்காக பத்மப்ரியாவை தயாராகும்படி இயக்குனர் கூறியிருக்கிறார். அப்போது பத்மப்ரியா தனது உடையலங்காரத்துக்காக சில லகரங்களை கேட்டிருப்பார் போல. ஆனால், குறிப்பிட்ட பட்ஜெட்டுக்கு மேல் செலவு செய்ய முடியாது என்று கூறிவிட்டதாம் தயாரிப்பு நி்ர்வாகம். உடனே, தம்மாலும் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம் பத்மபிரியா. இதனையடுத்து 'துரை'யில் பத்மப்ரியாவுக்கு பதில் வேறொரு நாயகி நடிப்பார் என ஏ.வெங்கடேஷ் அறிவுத்துள்ளார். இப்போதுதான், மிருகம் பட சர்ச்சை அடங்கி இருக்கும் நிலையில் அடுத்த சர்ச்சைக்கு விதை தூவியுள்ளார் பத்மா.
Write Comment |
||||
மற்றவை
- தசாவதாரம் திரைப்படம் ஜுன் 13 ல் ரிலீஸ்
- ஐபிஎல் அணி விளம்பரத்தில் நயன்
- அஜீத் மகள் பெயர் அனோஷ்கா
- யுவனுக்கு செல்வராகவன் கல்தா
- கவலையில் தங்கர்பச்சான்
- விஜய் விரும்பிய 'அஞ்சாதே'
- தெலுங்கிலும் 'ஜோதா அக்பர்'
- சின்னத்திரையில் பிஸியான சிம்ரன்
- விழிப்புணர்வு படத்தில் விவேக்
- சர்சைக்குப் பெயர்போன பத்மபிரியா
பகுதி:: கோலிவுட் செய்திகள்

வாத்தியார் படத்தை இயக்கிய ஏ.வெங்கடேஷ் மீண்டும் அர்ஜூனை வைத்து 'துரை' என்ற படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க பத்மபிரியா ஒப்பந்தமானார்.

