| விழிப்புணர்வு படத்தில் விவேக் |
| Wednesday, 05 March 2008 | ||||
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுக்குப் பிறகு சின்னக் கலைவாணர் என ரசிகர்கள் செல்லமாக அழைப்பது விவேக்கைத்தான்.அந்தளவுக்கு கலைவாணர் வழியில் சினிமாவில் நல்ல விஷயங்களை நகைச்சுவையாக சொல்பவர் விவேக். சிரிப்பை மட்டும் வரவழைக்காமல் சிந்திக்கவும் வைப்பவர் நடிகர் விவேக. மூடப்பழக்ககங்களைச் சீண்டி இதுவரை சினிமாவில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வந்தவர், சென்னை மாநகராட்சியின் விழிப்புணர்வு படத்தில் இப்போது நடிக்கிறார். வீதியில் குப்பை போடுவது, எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது போன்ற சுகாதாரக்கேடான செயல்களுக்கு சென்னை மாநாகராட்சி அபராதம் விதிக்க உள்ளது. குப்பை பேடுவதும், எச்சில் துப்புவதும் எத்தனை பெரிய சுகாதாரக்கேட்டை உருவாக்கும் என்று விவேக் இந்த விழிப்புணர்வு படத்தில் தனக்கே உரிய பாணியில் சொல்கிறார். ஒரு நிமிடம் ஓடக்கூடிய இந்தப் படத்தை சென்னையின் அனைத்து திரையரங்குகளிலும் திரையிட முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை நகர மேயர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Write Comment |
||||
மற்றவை
- தசாவதாரம் திரைப்படம் ஜுன் 13 ல் ரிலீஸ்
- ஐபிஎல் அணி விளம்பரத்தில் நயன்
- அஜீத் மகள் பெயர் அனோஷ்கா
- யுவனுக்கு செல்வராகவன் கல்தா
- கவலையில் தங்கர்பச்சான்
- விஜய் விரும்பிய 'அஞ்சாதே'
- தெலுங்கிலும் 'ஜோதா அக்பர்'
- சின்னத்திரையில் பிஸியான சிம்ரன்
- விழிப்புணர்வு படத்தில் விவேக்
- சர்சைக்குப் பெயர்போன பத்மபிரியா
பகுதி:: கோலிவுட் செய்திகள்

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுக்குப் பிறகு சின்னக் கலைவாணர் என ரசிகர்கள் செல்லமாக அழைப்பது விவேக்கைத்தான்.

