| சின்னத்திரையில் பிஸியான சிம்ரன் |
| Thursday, 06 March 2008 | ||||
திருமணத்திற்குப் பிறகு பெரிய திரையில் வலம் வர முடியாவிட்டாலும், சின்னத் திரையில் மற்றவர்களை விட படு பிஸியாக இருக்கிறார் நடிகை சிம்ரன்.சின்னத்திரை என்றவுடன் மற்ற நடிகைகளைப் போல, மெகா தொடர்களில் தலை காட்ட விரும்பாத சிம்ரன் சில வித்தியாசமான் நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஜெயா டிவியில் 'சிம்ரன் திரை' என்ற பெயரில் சுஜாதா உள்ளிட்ட பெரிய எழுத்தாளர்களின் கை வண்ணத்தில் உருவான குறுந்தொடர் நாடகங்களில் நடிக்கிறார். கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் அவ்வப்போது தலை காட்டி விட்து போகிறார். இப்போது சன் டிவியில் 'சூப்பர் ஸ்டார்ஸ்' என்ற நிகழ்ச்சியை விஜய் ஆதிராஜ்ஜுடன் இணைந்து வழங்கு இருக்கிறார். சில்வர் ஸ்டார் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வழங்கும் இந்நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாக இருக்கிறது. இதன் மூலமாக சிறந்த ஹூரோ, ஹீரோயின்கள் தேர்ந்தெடுத்து இந்த நிறுவனமே சினிமா வாய்ப்பையும் தர இருக்கிறதாம். இவர்களுக்கு நடிக்கச் சொல்லிக் கொடுக்க ஆர்வமாக இருக்கிறார் நம்ம சிம்ரன். பெரிய திரையை மறந்திட வேண்டாம் அம்மணி!
Write Comment |
||||
மற்றவை
- தசாவதாரம் திரைப்படம் ஜுன் 13 ல் ரிலீஸ்
- ஐபிஎல் அணி விளம்பரத்தில் நயன்
- அஜீத் மகள் பெயர் அனோஷ்கா
- யுவனுக்கு செல்வராகவன் கல்தா
- கவலையில் தங்கர்பச்சான்
- விஜய் விரும்பிய 'அஞ்சாதே'
- தெலுங்கிலும் 'ஜோதா அக்பர்'
- சின்னத்திரையில் பிஸியான சிம்ரன்
- விழிப்புணர்வு படத்தில் விவேக்
- சர்சைக்குப் பெயர்போன பத்மபிரியா
பகுதி:: கோலிவுட் செய்திகள்

திருமணத்திற்குப் பிறகு பெரிய திரையில் வலம் வர முடியாவிட்டாலும், சின்னத் திரையில் மற்றவர்களை விட படு பிஸியாக இருக்கிறார் நடிகை சிம்ரன்.

