அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
யுவனுக்கு செல்வராகவன் கல்தா
Saturday, 15 March 2008
தமிழ் சினிமா வரலாற்றில் மற்றுமொரு கூட்டணி பிரிந்திருக்கிறது. அது செல்வராகவன்-யுவன் சங்கர் ராஜா கூட்டணிதான்.

இந்தக் கூட்டணியால் உருவான படங்கள் அனைத்தும் பெரும்பாலும் வெற்றிப் படங்களாகவே அமைந்துள்ளது. புதுப்பேட்டை படம் ஓடவில்லை என்றாலும் கூட பாடல்கள் சூப்பர் ஹிட்டானது.

ஆனால், தற்போது 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா.

இந்தப் படத்திற்கு யுவன்தான் முதலில் இசையமைத்தார். இப்போது திடீரென்று அவரை மாற்றிவிட்டு, ஜி.வி. பிரகாஷ்குமாரை ஒப்பந்தம் செய்துள்ளார் செல்வராகவன்.

இசையமைப்பாளரை மாற்றியதோடு தனது ஆஸ்தான பாடலாசிரியர் நா. முத்துக்குமாரையும் படத்திலிருந்து தூக்கியிருக்கிறார்.

இப்போது 'ஆயிரத்தில் ஒருவனு'க்கு பாடல் எழுதுகிறவர், வைரமுத்து!

ஏற்கனவே ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவருக்கு பதில் ராம்ஜிக்கு வாய்ப்பளித்தார் செல்வராகவன். இப்போது யுவன், முத்துக்குமார். அடுத்து யாரோ!



 



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code