|
Thursday, 27 March 2008 |
காதலிப்பதில் ஆர்வம் யாருக்கு அதிகம் என்பது குறித்து ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். இருந்த ாலும் இதில் முதலிடத்தை தட்டிச் செல்வது ஆண்கள்தான்.
இந்தியாவில் 100 பேரில் சராசரியாக 44 ஆண்களும், 41 பெண்களும் காதலித்தும் கொண்டிருக்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு.
அதே வேளையில் ஏமாற்றப்படுவதில் யார் முன்னிலை என்றால், அதன் விடை மேற்கண்ட ஆய்வு முடிவுக்கு நேர்மாறாகவே இருக்கிறது.
காதலிப்பவர்களிடம் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் மயங்கிப் புலம்புகிறவர்களிலும் பட்டியலிலும் பெண்களே முதலிடம் பிடிக்கின்றனர். அதாவது 73 சதவீத பெண்களும், ஆண்களில் 62 சதவீதத்தினரும் இப்படி நடந்து கொள்கின்றனராம்.
காதல் ஜோடிகள் பெரிதும் விரும்பி அமர்ந்து பேச விரும்புவது ஓட்டலில்தானாம். இதற்கு அடுத்த இடத்தில் சினிமா இருக்கிறதாம்.
இதையும் அந்த ஆய்வே குறிப்பிட்டுள்ளது.
|