| பெண்களே நீங்கள் எப்படிப்பட்டவர்..? |
| Friday, 30 November 2007 | ||||
இந்தக் காலத்தில் பெண்களைப் பிடிக்காத அல்லது விரும்பாத ஆண்களும் இருக்கிறார்களா என்ன? பெண் எப்படிப்பட்ட குணமாக இருந்தாலும் காதல் அரும்பும் வரை க்ண்டுகொள்ளாமல் இருந்தாலும், காதல் கைகூடிய பிறகு, சில கெட்ட குணங்கள் பெண்களிடம் தொடர்ந்தால் ஆண்கள் வெறுக்கத்தான் செய்கின்றனர்.ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விகயங்கள் என்ன... இதோ... சில பெண்கள் , தன் பாய் பிரண்ட் மட்டும் தான் செலவு செய்ய வேண்டும் என நினைக்கின்றனர். தன்னை மட்டும் செலவு செய்ய வற்புறுத்தும் பெண்களை இக்காலத்து ஆண்கள் விரும்புவதில்லை. சில பெண்கள் தன் பாய் பிரண்டிடம் தாங்கள் சொல்வதும் செய்வதுமே சரி என எதற்கெடுத்தாலும் வாதம் புரிவார்கள் இது கூட ஆண்களுக்கு கொஞ்சம் கூடப் பிடிப்பதில்லை. பாய் பிரண்டோடு இருக்கும் போது, எனக்கு எப்பொழுதும் பிரச்சினைதான் எனக்கு நிம்மதியில்லை. பாதுகாப்பில்லை என உளறிக் கொட்டுவதை நிறுத்தவும். தன்னம்பிக்கை மிகுந்த பெண்களைத் தான் ஆண்கள் அதிகம் விரும்புவார்கள். ஒருவரையொருவர் பரஸ்பரம் புரிந்து கொள்ள ஒரு தடவை மட்டும் பழைய விகயங்களைச் சொல்வது நல்லது. மீண்டும், மீண்டும் பழைய குப்பையைக் கிளறினால் அதே குப்பையில் உங்கள் காதலும் மூழ்கிவிடும். காத்திருப்பது என்பது எல்லோருக்கும் வெறுப்பு ஏற்றக் கூடிய விகயம். ஓரளவு தான் யாரும் தாக்குப் பிடிப்பார்கள். அதுவும் விட உங்கள் மீதுள்ள பிரியத்தால் மட்டுமே காத்திருப்பார்கள். அதுவே தொடர ஆரம்பித்தால் வெறுத்து ஓடி விடுவார்கள்.. எனவே, பெண்களே நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை உணர்ந்து உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
Write Comment |
||||

இந்தக் காலத்தில் பெண்களைப் பிடிக்காத அல்லது விரும்பாத ஆண்களும் இருக்கிறார்களா என்ன? பெண் எப்படிப்பட்ட குணமாக இருந்தாலும் காதல் அரும்பும் வரை க்ண்டுகொள்ளாமல் இருந்தாலும், காதல் கைகூடிய பிறகு, சில கெட்ட குணங்கள் பெண்களிடம் தொடர்ந்தால் ஆண்கள் வெறுக்கத்தான் செய்கின்றனர்.

