| முத்தத்தை விரும்பும் பெண்கள் |
| Friday, 07 December 2007 | ||||
முத்தம் என்ற உணர்வுப் பூர்வமான விகயத்திற்கு பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுப்பதில்லை என அமெரிக்காவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பெண்கள் முத்தத்தை தங்கள் இணை வாழ்க்கை உறவின் ஒரு அங்கமாகக் கருதுகின்றனர். காதலை அர்த்தப்படுத்திக் கொள்ளவும், தங்கள் நீண்டகால உறவினை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ளவும் அதன் நிலைப்பாட்டை சரி செய்து கொள்ளவும் முத்தத்தையே விரும்புவதாக அந்த ஆய்வு கூறுகிறது. ஆனால் ஆண்களைப் பொறுத்தவரையில் காதல் உறவின் போது முத்தம் ஒரு கிரியா ஊக்கியாகப் பயன்படுகிறதே தவிர, அவர்களுக்கு முத்தம் என்பது நீண்ட கால உறவினைப் புதுப்பிக்க பயன்படும் ஒன்றாக இல்லை. ஆசை அதிகரிக்கும் போது ஒரு அடையாளமாக அது வெளிப்படுகிறது. ஆண்களும் பெண்களும் முத்தத்தை மிகவும் ரசிக்கிறார்கள் என்றாலும் பெண்களே அதற்கு ஒரு ஆத்மார்த்தமான அர்த்தத்தை கற்பிக்கிறார்கள். முத்தமே இல்லாத உடலுறவைக் கூட ஆண்களால் நிகழ்த்தி விட முடியும். ஆனால் பெண்களுக்கு அப்படியல்ல என்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறதாம். எனவே, ஆண்களே புரிந்து கொள்ளுங்கள், உங்கள் இல்வாழ்க்கையின் இணையை நேரம் கிடைக்கும் போதெல்லாம் முத்த மழையால் நனைத்திடுங்கள்.
Write Comment |
||||

முத்தம் என்ற உணர்வுப் பூர்வமான விகயத்திற்கு பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுப்பதில்லை என அமெரிக்காவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 

