|
உங்கள் 'லைப் பார்ட்னர்' எப்படி...?
|
|
Friday, 21 December 2007 |
திருமணத்திற்குப் பின்னர் தம்பதி ஒருவருக்கொருவர் எல்லா விஷயத்திலும் பரஸ்பரம் புரிந்து கொண்டு நடந்துவிட்டால் அங்கு பிரச்சனைக்கு வாய்ப்பில்லை.
அப்படிப்பட்ட தம்பதியை 'மெய்ட் பார் ஈச் அதர்'(Made for each other) ஜாடிக்கேத்த மூடி என்போமே அதுபோலத்தான.சரி, எனது லைப் பார்ட்னர் எனக்கு பொருத்தமானவர்தானா என்பதை எப்படி நான் தெரிந்து கொள்வது...? என நீங்கள் கேட்கும் கேள்வி எங்களுக்கு கேட்கிறது.
இதோ உங்களுக்கான ஒரு டெஸ்ட்:
* உங்களுக்குப் பிடித்த நிறமே உங்களது துணைக்கும் பிடிக்குமா...?
* உங்களின் இருவரின் நண்பர்கள் வட்டாரம் எப்படி? ஒரே மாதிரியான குணாதிசியங்களைக் கொண்டவர்கள்தானா..?
* நீங்கள் வீட்டில் 'டிவி' பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்! அந்த சானலையே உங்களது துணையும் விரும்புமா..?
* உங்கள் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் வருமா? இல்லை எளிதில் ஒத்துப் போய்விடுவீர்களா..?
* ஏதாவது ஒரு தருணத்தின் போது, அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதை உங்கள் துணையால் யூகிக்க முடியுமா?
* ஏதாவது ஷாப்பிங் போவதென்றாலும் ஒன்றாகத்தான் செல்வீர்களா...? அப்படிச் சென்றால் ஒரே மாதிரியான பொருட்களையேதான் தேர்வு செய்வீர்களா?
* உங்கள் இருவருக்கும் பிடிக்காத பொதுவான விஷயம் என ஏதும் இருக்கிறதா?
* உங்கள் இருவரின் பொழுதுபோக்கும் ஒரே மாதிரியானவை தானா?
* இதே போல, விளையாட்டு, புத்தகம் படித்தல் போன்ற விஷயங்களில் உங்கள் இருவரின் எண்ணங்களும், சிந்தனைகளும் ஒன்றாக இருக்கிறதா...?
இந்த எல்லாக் கேள்விகளுக்கும் கிட்டத்தட்ட 'ஆம்' என்பது உங்களது பதிலாக இருந்தால், உங்களது துணைவருக்கு/துணைவிக்கு ஏற்ற ஜோடி நீங்கதான். விடாதீங்க!
'இல்லை' என்பது உங்களது பதிலானால், உங்களது துணையிடம் உங்களது விருப்பு வெறுப்பு குறித்து தெளிவாக எடுத்துக் கூறுங்கள். எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த உங்களது ஆசையை துணைவருக்கு புரிய வையுங்கள். 'ஆல் தி பெஸ்ட்'
|