|
Friday, 28 December 2007 |
|
திருமண வாழ்க்கை எத்தனை பேருக்கு இன்பம் தருவதாகவும், திருப்திகரமாகவும் இருக்கிறது என்று ஆய்வு நடத்தப்பட்ட போது, அதன் முடிவு தூக்கி வாரிப்போடுவதாக இருக்கிறது.
ஏனெனில் தம்பதியர் ஒருவருக்கொருவரிடையே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை மிகவும் குறைந்து கொண்டே போகிறது.
பரஸ்பரம் புரிந்து கொள்வதும் கிடையாது. இதனால் இடைவெளிகள் அதிகமாகி பிரச்சனைகள் பெருகி வருகின்றன.
பிரச்சனைகள் எங்கிருந்து ஆரம்பிக்கின்றன என்று பார்த்தால், அது அவர்கள் வாழும் இடத்தைப் பொறுத்ததாகவும் இருக்கலாம்,
சில சமயங்களில் வீட்டு வேலையின் போது கணவன் உதவுவதில்லை என மனைவியும், எனது எதிர்கால வளர்ச்சியில் மனைவிக்கு ஆர்வமோ, அக்கறையோ இல்லை என்று கணவனும் குற்றம் சாட்டுவது அதிகரித்து வருகிறது.
இப்படி சிறு சிறு விஷயங்களில் ஆரம்பிக்கும் பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இறுதியில் இப்பிரச்சனைகள் விவாகரத்தில் விடிகிறது. மனைவியின் சுகத்தில் பங்கு கொள்ளும் கணவன்கள், அவர்களது சோகத்தை கண்டுகொள்வதில்லை.
தாம்பத்ய இன்பத்தில் இருவரும் முழு திருப்தியடைவில்லையெனில் அதனால் உண்டாகும் ஏமாற்றத்தை கோபமாக ஒருவருக்கொருவர் காட்டிக் கொள்வதும் வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது.
பணம் தேடும் இயந்திர உலகில் பழகிவிட்ட மனிதனுக்கு மற்ற இன்பங்களில் மனம் லயிக்க மறுக்கிறது. இதனால் இல்லற வாழ்வு கசப்பாகிறது.
விடுமுறை நாட்களின் வெளியில் எங்கும் சுற்றாமல் வீட்டில் டிவியை பார்க்க வைத்தே பொழுதைக் கழிக்கும் க ணவன்மார்களை எந்த பெண்ணும் விரும்புவதில்லை.
இதற்கெல்லாம் என்ன தீர்வு? இப்பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு விவாகரத்துதான் என்றால் பின்னர் திருமண பந்தம் அர்த்தமற்றதாகிவிடும் இல்லையா?
அப்படியானால் என்ன செய்யலாம்...?
ஒரு பேப்பர் பேனாவை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணை மீது உங்களுக்கான கோபங்கள், குற்றங்களை ஒரு வெள்ளை காகிதத்தில் ஒன்றன் பின் ஒன்றாக எழுதிக்கொள்ளுங்கள். இருவரும் ஒருவருக்கொருவர் காகிதங்களை பரிமாறிக் கொள்ளுங்கள்.
இப்போது, ஒவ்வொரு குற்றச்சாட்டு குறித்தும் பொறுமையாக நிதானமாக விவாதியுங்கள்.
ஒவ்வொரு விஷயத்தில் என்னால் முடிந்தவரை உன்னை திருப்திபடுத்த முயற்சி செய்கிறேன் என உறுதியளியுங்கள். அதன்படி கொஞ்சம் கொஞ்சமாக நடக்க முயற்சி செய்யுங்கள்.
இன்றே! இப்பொழுதே!
பின்னர் என்ன ? ஊரே போற்றும் உத்தம தம்பதியாகி விடலாம் நீங்கள்!
|