| மன்னிக்கும் மனோபாவம் உண்டா? |
| Friday, 04 January 2008 | ||||
உங்கள் காதலர் அல்லது துணைவர் ஏதாவது தவறு செய்தாலோ, செய்திருந்தாலோ நீங்கள் எளிதில் மன்னித்து விடுவீர்களா...? இல்லை 'மன்னிப்பு' தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை என்ற தொணியில் கோப்பப்படுவீர்களா....? இதோ உங்களை நீங்களே அறிந்து கொள்ளும் ஓர் எளிய திறனாய்வு உங்கள் ஆண்/பெண் நண்பர் உங்களை ஏதாவது சொல்லி உங்கள் மனதை காயப்படுத்தி விடுகிறார். அந்த செயல் உங்களை மிக ஆழமாக பாதித்து விடுகிறது. அதனை எளிதாக எடுத்துக் கொண்டு மன்னிப்பீர்களா...? ஒருவேளை தவறு செய்தவரே தவறை உணர்ந்து உங்களிடம் வந்து மன்னிப்பு கேட்டால்...? அவர் செய்யும் ஒவ்வொரு தவறையும் இப்படி மன்னிப்பீர்களா? நீங்கள் தவறு செய்து விடுகிறீர்கள்..? அதற்காக வழியச் சென்று மன்னிப்பு கேட்பீர்களா ? உங்கள் பர்ட்னர் ஏதோ விஷயத்தில் உங்களை ஏமாற்றி விடுகிறார் அப்போது...? தவறுகளை மன்னித்து மறந்து விடுவீர்களா...? மேலே உள்ள கேள்விகளுக்கு எல்லாம் ஆம் என்பது பதில் என்றால், அடடா! எவ்வளவு பெரிய உயர்ந்த உள்ளம் உங்களுக்கு. உண்மையிலேயே உங்களை லைப் பார்ட்னராக அடைபவர் மிகவும் கொடுத்து வைத்தவர்தான் போங்கள்! இல்லை என்பது உங்களது பதில் என்றால், வேறென்ன சொல்ல, தவறுகளை மன்னிக்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளும் வகையில் பக்குபடுத்திக் கொள்ளுங்கள். தவறு செய்வது யாருக்கும் எளிது. அதனை மறத்தல் மனித குணம். ஆனால், மன்னித்தல் தெய்வ குணம். எனவே, மறப்போம்! மன்னிப்போம்!
Write Comment |
||||

உங்கள் காதலர் அல்லது துணைவர் ஏதாவது தவறு செய்தாலோ, செய்திருந்தாலோ நீங்கள் எளிதில் மன்னித்து விடுவீர்களா...? இல்லை 'மன்னிப்பு' தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை என்ற தொணியில் கோப்பப்படுவீர்களா....? 

