அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
பெண்களுக்கு பிடித்தமான ஆண்கள் யார்?
Tuesday, 30 October 2007
love
நண்பர்களே காதலிக்க விரும்பும் நீங்கள், எப்படி நடந்து கொண்டால் உங்களை பெண்களுக்குப் பிடிக்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

பெண்களுக்கு நேர்மையான, அதே நேரத்தில் வெளிப்படையான, எந்த விகயத்தையும் எதார்த்தமாக எடுத்துக்கொள்ளும் ஆண்களை மிகவும் விரும்புவார்கள்.

உங்கள் காதலியுடன் வெளியில் செல்லும் போது, எதிரே அழகான பெண் வந்தாலும் கண்டும், காணாததைப் போல் சென்று விட வேண்டும்.

ஏனெனில் எதிரே பெண் வரும் போது, நீங்கள் பார்க்கிறீர்களா என உங்கள் காதலி உங்களை நோட்டமிடுவார்.

காதலியின் பிறந்தநாள் முதல், தேர்வு தேதி தெரிந்து வைத்துக்கொண்டு அவ்வப்போது  பரிசுப் பொருட்கள் முதல் பேனா, பென்சில் வரை வாங்கித் தர வேண்டும்.

உங்கள் காதலி, உங்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது லேசாக தலைவலிக்கிறது, காய்ச்சல் அடிக்கும் போலிருக்கிறது என ஏதாவது சொல்லி வைப்பார்கள்.

ஆனால், அதனை கொஞ்சமும் மறக்காமல் ஞாபகத்தில் வைத்து மறுநாள், இப்போது தலைவலி எப்படி இருக்கிறது. காய்ச்சல் சரியாகி விட்டதா என்று விசாரிக்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு அவள் மீது அக்கறை இருக்கிறது என்று நம்புவாள்.

உங்கள் கேர்ள் பிரண்ட், மற்ற ஆண்களிடம் பழகுவதை தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மாறாக அவள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கை உங்களை  அவளிடம் உயர்வாக காட்டும்.

உங்கள் காதலியுடன் இருக்கும் போது, முடிந்தவரை உங்கள் சொந்த பிரச்னைகளைத் தவிர்த்து விட்டு, அவளது பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

இவற்றை நீங்கள் சரியாக பின்பற்றினால், உங்கள் காதலி, நீங்கள் விரும்பும் பெண்ணோ உங்களையே சுற்றி சுற்றி வருவார்.







 






Comments (1)
RSS comments
08-05-2008 12:35
useful
Written by humayun (Guest)

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code