அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
காதல் தோல்வியா...என்ன செய்யலாம்
Tuesday, 29 January 2008
 பரந்து விரிந்த இவ்வுலகில் காதலைச் சந்திக்காத மனிதர் என்று யாரையும் சொல்லி விட முடியாது.

அப்படிக் காதலைச் சந்தித்தவர்களில் எத்தனை பேருக்கு அந்தக் காதல் வெற்றி பெற்றிருக்கிறது என்றால் சிலரை மட்டுமே கை  காட்ட முடியும்,

ஆனால், காதலில் தோல்வியடைந்தவர்கள்...

காதல் காயத்தால் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் எத்தனையோ பேரை நேரடியாகவே நாம் பார்க்க முடிகிறது.

இவர்களது, காயங்களுக்கு என்ன மருந்து?

எதையும் எதார்த்தமாய் எடுத்துக் கொண்டு வாழத் தெரிந்தவர்கள் இந்த துன்பத்தில் இருந்து எளிதில் மீண்டு விடுகிறார்கள்.

ஆனால், மற்றவர்கள்... அந்த மற்றவர்களுக்காகத்தான் இங்கே சில டிப்ஸ்.

மறதி மட்டும் இல்லை எனில் மனித இனத்திற்கே பைத்தியம் பிடித்திருக்கும். ஆம்! காதலுக்கும் மறதி முக்கியம். கெட்ட செய்திகளை, சம்பவங்களை, நினைக்க விரும்பாத, விரும்பத்தகாத நிகழ்வுகளை முதலில் மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் காதலியோ, காதலனோ சந்தர்ப்ப சூழ்நிலையாலோ அல்லது ஏமாற்றியோ கை விட்டு விட்டால், அந்த காதல் அங்கேயே முறிந்து விடுகிறது. அதையே நினைத்து அவஸ்தைப் படுவதை விட
 மறக்க முயற்சிப்பதுதான் புத்திசாலித்தனம்.

உங்களது பழைய துணையை வெறுக்க கற்றுக் கொண்டால் மறப்பது எளிது. உங்கள் துணையிடம் உங்களுக்குப் பிடிக்காத பழக்க வழக்கங்களை முதலில் பட்டியலிடுங்கள். அதனை தினமும் வாசித்துப் பாருங்கள்.

உங்களை அறியாமலேயே அவர் மீது உங்களுக்கு வெறுப்பு தோன்றி விடும்.

காதலைத் தவிர உங்களது ஈடுபாடு மிக்க மற்ற விஷயத்தில் மிகவும் வெறித்தனமாக செயல்படுங்கள். உங்கள் காதல் தோல்வியால் ஏற்பட்ட ஏமாற்றங்களை அவர் மீதான கோபாமாக மாற்றுங்கள். அந்த கோபம் முழுவதையும்  நீங்கள் ஈடுபடப் போகும் வேலையில் காட்டுங்கள்! எளிதில் வெற்றி பெற முடியும்.

உங்கள் ஆதங்கத்தை கவிதையாய், உரைநடையாய், ஓவியமாய், நடனமாய் வெளிப்படுத்துங்கள், உங்கள் வெளிப்பாடு சிறப்பாக இருக்கும்.

காதலில் வெற்றி பெற்றவனை விட தோல்வியடைந்தவன் எழுத்து வலிமையாக இருக்கும். வேடிக்கை பார்ப்பவனை விட வேதனைப்பட்டவனுக்கே அனுபவம் அதிகமாக இருக்கும்.

உங்கள் கவனத்தை முடிந்தவரை காதலில் இருந்து வேறு திசைக்கு மாற்ற முயற்சியுங்கள். செல்லப் பிராணிகளை வீட்டில் வளர்க்க முயற்சியுங்கள். அதனைக் காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் வேலையை காதலியுங்கள, நீங்கள் விரும்பியதைக் காதலியுங்கள். நீங்கள் தோல்வியடைந்தவரல்ல...நீங்களே வெற்றியாளர்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code